tamilnadu

img

நீலகிரியில் கடந்த  3 நாட்களில் 2536 மி.மீ., மழை பதிவு.....

உதகை:
அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களில் 2536 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. 

அரபிக் கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயல் காரணமாக கேரளா மற்றும்மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 14ம் தேதியில் இருந்து மழை பெய்து வருகிறது.நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதால் பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் கூடலூரில் முகாமிட்டுள்ளனர். இதுதவிர, தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள னர். இதனிடையே கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. பாதுகாப்பு கருதி தேவாலா, சேரம்பாடி பகுதியை சேர்ந்த 60 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சேரங்கோடு ஊராட்சி பகுதியில் கட்டி முடித்து சில வாரங்களே ஆன தடுப்பு சுவர், இன்டர்லாக் சாலை இடிந்து சேதமடைந்தது. அதிகபட்சமாக பந்தலூரில் 180 மி.மீ., தேவாலா 145 மி.மீ., அப்பர்பவானி மற்றும் சேரங்கோட்டில் தலா 106 மி.மீ., மழையும் பதிவாகி யுள்ளது.டவ்-தே புயல் காரண மாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் 2536 மி.மீ., மழை பெய்துள்ளது. 

பதிவான மழையளவு (மி.மீட்டரில்)
 ஊட்டி 20.8, நடுவட்டம் 91, குந்தா 23, அவலாஞ்சி 54, எமரால்டு 25, கெத்தை 44, கிண்ணக்கொரை 24, அப்பர்பவானி 106, பாலகொலா 22, குன்னூர் 17, கோத்தகிரி 13, கூடலூர் 68, தேவாலா 145, செருமுள்ளி 68, பாடந்தொரை 67, பந்தலூர் 180, சேரங்கோடு 106 என மொத்தம் 1298 மி.மீ. பதிவாகியுள்ளது. தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

;