tamilnadu

img

கிராம சபைக் கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால் பரபரப்பு

உதகை, ஜன. 27- குன்னூர் அருகே கிராம சபை கூட்டத்திற்கு அதி காரிகள் வராததால்  பரபரப்பு ஏற்பட்டது.  நீலகிரி மாவட்டம், குன்னூர், வண்டி சோலை ஊராட்சியில் தலைவர் மஞ்சுளா தலைமையில் கிராம சபை கூட்டம் ஞாயிறன்று நடைப்பெற்றது. இந்த ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத் தில் நடைபெற்றுள்ள மோசடி குறித்தும், வனத்துறை யினர்  கடந்த 8 ஆண்டுகளாக  சோலடாமட்டம் பகு தியில்  சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்தும், நஞ்சப்புரசத்திரம் பகுதியில் மர்மநோய் தாக்கி உடல் முழுவதும் புண்கள் ஏற்பட்டு மக்கள் அவதி அடைந்து வருவது குறித்தும் கிராம சபை கூட்டத்தில் விவாதித்து முடிவு காண்பதற்கு பொது மக்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். ஆனால் இந்த கூட்டத்திற்கு வனத்துறை,  சுகாதார துறை, கல்வித் துறை மற்றும் முக்கிய அதிகாரிகள் யாரும் வர வில்லை.  இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்த விடாமல் தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 3 மணி நேர  கால தாமதத்திற்கு பின்னர் வனத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் வந்தவுடன் மீண் டும் கூட்டம் துவங்கியது. இதில், அனைத்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

;