tamilnadu

img

சிபிஎம் அரசியல் விளக்க பொதுக் கூட்டம்

கோத்தகிரி மார்க்கெட் திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க பொதுக் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தாலுகா செயலாளர் வி.மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எல்.சங்கரலிங்கம் துவக்கி வைத்து பேசினார். மாவட்டக் குழு உறுப்பினர் கே.ராஜேந்திரன், கே.மகேஷ், ஆகியோர் கருத்துரை ஆற்றினர். மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் நிறைவுரை ஆற்றினார். முடிவில் இடைக்குழு உறுப்பினர் சுந்தர் நன்றி கூறினார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் தாலுகா குழு உறுப்பினகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.