tamilnadu

img

நீலகிரியில் அதிகரிக்கும் கொரோனா : 2 வங்கிகள், தனியார் மருத்துவமனை மூடல்

உதகை, ஆக. 30 - கொரோனா பாதிப்பின் காரணமாக உதகையில் இரண்டு வங்கிகள் மற்றும் தனியார் மருத்துவமனை மூடப்பட்டன. நீலகிரி மாவட்டம், உதகை கமர்சியல் சாலையில் உள்ள கனரா வங்கியில் பணிபு ரியும் ஊழியர் ஒருவருக்கு சனியன்று  கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட் டது. இதனால் தடுப்பு நடவடிக்கையாக  உதகை கனரா வங்கி மூடப்பட்டது. வங்கி ஊழியருடன் தொடர்பில் இருந்த வங்கி மேலாளர் உள்பட 10 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதே போல், சேரிங்கிராஸ் சந்திப்பில் உள்ள யூகோ வங்கியில் பணிபுரியும் வங்கி ஊழியர்கள் 2 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த வங்கியும் மூடப்பட்டது.  மேலும், உதகை எல்க்ஹில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 65  வயதான பெண் மருத்துவருக்குக்  கொரோனா நோய்த்தொற்று உறுதியா னது.

இதையடுத்து தடுப்பு நடவடிக்கை யாக தனியார் மருத்துவமனை மூடப் பட்டு, கிருமி நாசினி தெளித்து சுகாதார பணி கள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், மருத்து வமனையில் பணிபுரியும் செவிலியர்கள்  உள்பட அனைவருக்கும் கொரோனா பரி சோதனை செய்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 4 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நீலகிரியில் சனியன்று கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 1,551 ஆக உயர்ந்தது. இதில் 1,234 பேர் பூரண  குணமடைந்து வீடு திரும்பினர். 10  பேர் உயிரிழந்தனர். 307 பேர் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

;