உதகை,பிப்.13- நீலகிரி மாவட்டத்தில் வருடாந்திர வனவிலங்கு கணக் கெடுக்கும் பணி செவ்வாயன்று துவங்கியது. நீலகிரி மாவட்ட வன கோட்டத்திற்கு உட்பட்ட குந்தா, கோர குந்தா, ஊதகை வடக்கு, பார்சன்ஸ் வேலி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட 13 வனச்சரகத்திலும் ஆண்டுக்கு ஒரு முறை வன விலங்குகளை கணக்கெடுக்கும் பணி நடை பெறும். அதேபோல் இந்த ஆண்டும் வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி செவ்வாயன்று துவங்கியது. இந்த பணிகளில் 60க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற தன்னார்வ லர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் பங்கேற்று வருகின் றனர். இந்த பணி தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற உள் ளது. இதில், வனங்களில் வாழும் புலி, சிறுத்தை, காட்டெ ருமை, யானை, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகளின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக்க உள்ளனர். இக்கணக்கெடுப்பு பணியினை வன விலங்கு களை நேரடியாக பார்த்தும், அவற்றின் எச்சங்களை கொண்டும் மேற்கொள்ள உள்ளனர். மேலும், ஐந்தாவது நாளில் நீலகிரி வனக்கோட்டத்தை ஒட்டியுள்ள முக்கிய நக ரப்பகுதிகளில் சுற்றி திரியும் காட்டு மாடுகளின் எண் ணிக்கை குறித்தும், அவைகளின் உடல் நலம், நடமாடும் பகுதிகள், வாழ்விடங்கள் குறித்தும் கணக்கெடுத்து விவ ரங்களை பதிவு செய்ய உள்ளனர். இதேபோல், நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட சில பகுதிகளில் மட்டும் வாழ்ந்து வரும் வரையாடுகள் குறித்தும் கணக்கெடுக்க உள்ளதாக வனத்துறையினர் கூறியுள்ளனர்.