tamilnadu

img

ஒரே நாளில் 2000 பேர் பலி... கொரோனவால் திணறும் அமெரிக்கா

நியூயார்க் 
உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவை மையம் கொண்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அங்கு 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,065 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 9 லட்சத்து 60 ஆயிரமும், பலி எண்ணிக்கை 54 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வீடு தியூரம்பியுள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

குறிப்பாக அமெரிக்காவின் 7 மாகாணங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா நியூயார்க் நகரை சின்னாபின்னமாக்கியுள்ளது. அங்கு ஒரே நாளில் 1200-க்கும் மேற்பட்டோரை காவு வாங்கியுள்ளது. அமெரிக்காவில் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில்  நியூயார்க் தான் முதலிடத்தில் உள்ளது. நியூயார்க் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 16,500 ஆக உள்ளது. 
 

;