tamilnadu

img

உலகின் தங்க பெட்டகம் - பேரா.சோ.மோகனா

வாழ்க்கையில் ஏதாவது ஒரு நிகழ்வு/ செயல்பாடுகளில்  தங்கத்தை போட்டிருப்பீர்கள். அல்லது யாருக்காவது தங்கம் வாங்கிக் கொடுக்கும்படி நேர்ந்திருக்கும். அந்த தங்கத்துக்கு  எங்கு விலை யாரால் நிணயிக்கப்படுகிறது தெரியுமா? அதன் தரத்தை நிர்ணயம் செய்வது யார்? எங்கே? இதெல்லாம் என்றைக்காவது நினைத்துக்கூட பார்த்திருப்போமா? இப்பவும் கூட நம்மில்  நிறைய பேருக்கு, தெரியாது 

எப்படி கண்டுபிடித்தது?

மனிதன் எப்போது தங்கத்தைப் பயன்படுத்தினான், எப்படி கண்டுபிடித்தான், அப்போது அவனுக்கு பவுனோட மவுசு தெரியுமா என்பதெல்லாம் கேள்விக்குறியாகவும், பின்னர் அதற்கு விடையும் கூட கிடைத்திருக்கிறது.மனிதனுக்கு தங்கத்துடனான  ஈர்ப்பு என்பது வரலாற்றுக்கும் முந்தையது என்றுதான் குறிப்பிட வேண்டும். எப்ப சரியாக மனித இனம் தங்கத்தோட உறவு கொண்டாட ஆரம்பிச்சது என்று சரியாகத்  தெரியவில்லைதான்.ஆனால் மனிதன் வாழ்ந்த பழைய கற்கால குகைகளில் தங்க செதில்கள் கிடைத்துள்ளன என்றால்,அவை அங்கு அப்போது வாழ்ந்த மனித இனம்தான் பயன்படுத்தி இருக்க வேணும். இது ஒரு 40,000 (கி.மு. 40,000)ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்திருக்கவேண்டும் என்பதை அறிகிறோம். 

ஆதி தங்கம் 

நிறைய ஆதிகால சான்றுகளைத் தேடும்போது, மனித இனம் தங்கத்தை ஓர் உலோகமாகப் பயன்படுத்தினர். எனவே தங்கம் என்பது உலகத்தில் பல இடங்களில், பல மனித குழுக்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதும் தெரிய வருகிறது. ஒவ்வொரு குழுவுக்கும் வேறு வேறு கலாச்சாரம் என்பதால், அவரவர் கலாச்சாரத்துடன் இணைந்தே தங்கள் பயன்பாடு இருந்திருக்கிறது.பல இடங்களில் பயன்பாடு இருந்தாலும், சில இடங்களில் பதிவும், நிறைய இடங்களில் சப்தமின்றி பயன்பாடும் நிகழ்ந்திருக்கின்றன. 

தங்கமே நீ எங்கு தங்கினாய்?

தங்கம், சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே, எகிப்தியர்கள் தங்கம் பயன்படுத்தியதுடன், இறந்த பின்னர், அந்நாட்டு  மன்னரை அடக்கம் செய்யும்போது  தங்கத்தையும் சேர்த்து வைத்தே  பாரோவில் மூடினர். அப்போது அவர்கள்தான் முதன்முதலில் தங்க நகைகளைச் செய்வது பற்றிய திறமை அவர்களிடம் தோன்றியிருகிறது. நைல் நதிப்படுகையில், நதியில் தங்கத் துகள்கள் இருந்திருக்கின்றன. சுமேரியர், நாகரித்தில் சுமார்  3000 ஆண்டுகளுக்கு முன்னர், தங்க சங்கிலி செய்துள்ளனர். அரேபியர்கள் தங்கத்தை வணிகத்தில் பயன்படுத்தினர். 

உலகின் தங்கம் சேமிப்பு 

உலகில்  மனித வரலாற்றில், மிக மிக அதிகமான தங்கம் சேமிக்கப்பட்டுள்ளது எங்கு தெரியுமா? நியூயார்க் நகரின் மையமான, பிராடவே தெருவில், லோயர் மன்ஹாட்டன் என்னும் இடத்தில் இருக்கும் பெடரல் ரிசர்வ் வங்கிக்கு கீழே இருக்கும் இரு அறைகளில் தான். இங்கு சுமார்  80 அடி ஆழத்தில், பெடரல் வங்கியின் சிறப்பு பெட்டகம் உள்ளது. இதில்தான் உலகின் ஒட்டு மொத்த சேமிப்பு தங்கமும் உள்ளது. இது பாறைப்படுக்கையால் ஆனது. இதில் இரண்டு சிறப்பு பெட்டகங்கள் உள்ளன.   எல்லா நாடுகளும், தங்கள் ஊரையும் மக்களையும் நம்பாமல், அமெரிக்க பெடரல் வங்கியை நம்பி, தங்கள் வசம் உள்ள தங்கத்தை கொடுத்து வைத்துள்ளன. இங்கே அமெரிக்க நாடுகளின் தங்கம் இருப்பது ஒரு ஜுஜுபி. இந்த பெட்டகங்களுக்குள் சுமாராக 7,000 டன்கள்  உள்ள தங்க கட்டிகள் பகபகவென ஜொலிக்கும் சொக்கத்தங்கம் இங்கேதான் உள்ளது. இதுவரை உலகில் தோண்டி எடுக்கப்பட்ட தங்கத்தில்  5% இங்கேதான் இருக்கிறது.

உலக பாதுகாவலனா?

உலகின்  ஒட்டு மொத்தத்திலுள்ள சேமிப்பில் உள்ள தங்கம் இந்த வங்கியின் தரைதளத்துக்கும் கீழே உள்ள தங்க பெட்டகத்தில்  பாதுகாப்பாக உட்கார்ந்து இருக்கிறது. உலகத்தங்கம். சும்மா எம்புட்டு இருக்கும்னு யாராவது உத்தேசமா சொல்ல முடியுமா? ஹு ஹுக்கும், உங்களால் முடியாது. இவற்றில் ஒரு துணுக்கை கூட அமெரிக்கா என்னோடது என்று சொல்ல முடியாது. சொந்தமும் கொண்டாட முடியாது. அதன் சொந்தக்காரர்கள் 36 அயல்நாடுகளைச் சேர்ந்தவர்களுடையது. அது யார் யாருன்னு சொல்ல மாட்டார்கள். இங்குள்ள தங்கத்தின் மதிப்பு சுமார் 200,000,000,000 டாலருக்கு சமம். இந்த இரண்டு பெட்டகங்களில் முதன்மையானது, 1924ல் திறக்கப்பட்டது. மற்றது, 1963ல் திறக்கப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள மைய வங்கிகள், இந்த பெடரல் வங்கியை நம்பி, தங்களுடைய அனைத்து தங்கத்தையும் பாதுகாப்புக்காக கொடுத்து வைத்துள்ளன. தனிப்பட்ட மனிதர்களின் தங்க இருப்புகள் இங்கு வாங்கப்பட்ட மாட்டாது. 

சொந்தம் எது?

நியூயார்க்கின் 33,  லிபர்ட்டி தெருவில் அமைந்துள்ள பெடரல் ரிசர்வ் வங்கி, உலகிலே பெரிய வங்கி. இது 32 மாடிகள் கொண்ட ஒரு மாளிகை. இதன் ஜன்னல்களுக்கு கூட கேட் போட்டு வைத்துள்ளனர். இதன் கீழுள்ள, தரைக்கு அடியில் 80 அடி ஆழத்திலும், கடல் மட்டத்திலிருந்து 50 அடிக்கு கீழும் தங்க பெட்டகம் அமைக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள 7000 டன்கள்  உள்ள தங்க கட்டிகளின் மதிப்பு 250 பில்லியன் டாலர். இதிலுள்ள ஒவ்வொரு தங்க கட்டியின் மதிப்பு என்ன தெரியுமா? இன்றைய மதிப்பில் ஒரு தங்க கட்டியின் விலை 650,000 டாலர். இதில் இருக்கும் தங்கம் பெடெரல் வங்கிக்கு சொந்தமானதல்ல. இது ஒரு பாதுகாப்பாளராக செயல்படுகிறது. மேலும் தற்போதைய உலக சேமிப்பில் 10% இங்குதான் இருக்கிறது. இங்கு தற்போது அதிகமாக வைத்திருக்கும் கணக்கு 54 பில்லியன் டாலர்கள். 

பாதுகாப்பு எப்படி?

தங்க பெட்டகத்துக்கு பல அடுக்கு பாதுகாப்பு இருக்கிறது. முதலில் நுழைவில், 90 டன் எக்கு சிலிண்டர் .பின்னர் 9 அடி  உயர சிலிண்டரை, 140 டன் எஃகு மற்றும் காங்கிரீட்  பிரேமுக்குள் வைத்து மூடப்பட்டு இருக்கிறது. இவை அனைத்து நீர் மற்றும் காற்று உள்ளே நுழையாதபடி மேலும் 4 எஃகு துண்டுகள் உள்ளே நுழைக்கப்பட்டும். தேவைக்கு ஏறறாற்போல இங்கிருக்கும் தங்கம் எல்லாம் பெரும்பாலும் இரண்டாம் உலகப்போரின் போது கொண்டுவரப்பட்டவை ஆகும். 

இதற்குத்தானே ஆசைப்பட்டாய்...

இவ்வளவு தங்கம் வைத்திருக்கும் இடத்தை கொள்ளை அடிக்க, திருட ஆசை இல்லாமல் இருக்குமா? இருக்கும் இருக்கும், ஆனால் இதன் பாதுகாப்பு கருதிதானோ என்னவோ, இதுவரை யாரும் அப்படி முயற்சிக்கவில்லை. அப்படி செய்ய ஆசைப்பட்டால் என்ன ஆகும்? எளிதில் இதனுள்ளே நுழையும் வழி என்பது, இதன் அருகாமையிலுள்ள, சப் ஸ்டேஷனில் உள்ள tunnel  தான். அதுதான் 30 அடி  உயரத்தில் இருக்கிறது. அங்கே  போய் உடைப்பது என்றால், என்ன ஆகும், என்ன செய்யணும், உலகத்தின் மிகப் பலமான வலுவான, துளைப்பானைக் (Driller) கொண்டு, ஓட்டை போடணும், ஆனா அந்த துளைப்பானுக்கு நுனியில் வைரம் பொருத்தப்பட்ட முனை இருக்கணும். அப்பத்தான்  சுவரை துளை போட முடியும். அப்படி போட்டாலாவது ஓட்டை போட்டுடலாமா? அதுதான் ஆகாது. சுமார் இரண்டு மாத காலம் ஆகும், நீங்க ஓட்டை போட வேண்டும். ஆனால் சின்னதான அதிர்வு இருந்தால் கூட, அதிலுள்ள பாதுகாப்பு அலாரம் அலறி ஊரைக்கூட்டிடும். அப்புறம் அமெரிக்க போலீசின் துப்பாக்கி ரவைக்கு தீனிதான்.

ஒவ்வொரு தங்க கட்டியும் ஒரு தண்ணி பாட்டில் சைஸ்தான். எடை 27 பவுண்டுகள். இங்குள்ள தங்க கட்டிகள் 100% தங்கம்  அல்ல. இதில் செம்பு, வெள்ளி மற்றும் பிளாட்டினம் கலந்துள்ளன. ஒவ்வொன்றும் தனிப்பட்டது ஒன்றுபோல் மற்றொன்று கிடையாது. தனித்தனியாக அதன் எண்ணுடன் குறிக்கப்பட்டிருக்கும், ஒன்றும் இன்னொன்னும், வேறு வேறானவை. அந்த கட்டியிலேயே அந்த தங்கம் எங்க செய்யப்பட்டது என்ற முத்திரையும் இருக்கும். 

பாதுகாப்பும், கலைநயமும் 

தங்கத்தின் பாதுகாப்பு இப்படி தெரியுமா? சிலிண்டர், அலாரம், போலீஸ்  எல்லாம் தாண்டி, அந்த தங்க பெட்டகத்துக்கு பாதுகாப்பு படை என்பது கண்டரோல் குழு தனியாக உள்ளது. இதில் மூவர் உண்டு. ஒருத்தருக்கு கூட தனியா திறப்பது என்பது முடியாத விஷயம். பாதுகாப்பு ஒரு புறம் என்றால், அந்த கட்டிடத்தின் கலை நயம், வடிவமைப்பு இரும்பு, சுண்ணாம்பு, மணல் போன்றவையும் கலந்த கலைநுணுக்கத்தோடு கட்டப்பட்டுள்ள இந்த இத்தாலிய கலைநயம் ஆங்காங்கே மிளிர்கின்றன.

தங்க சுற்றுலா போலாமா? 

இதனைச் சுற்றிப்பார்க்க, ஒரு சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளனர். சுற்றிப்பார்ப்பது என்பது எல்லா வேலை நாட்களிலும் உண்டு. ஒரு பைசா கட்டணம் இல்லை. இதற்கு ஆன்லைனில்தான் பதிவு செய்ய வேண்டும். ஒரு முறையில் 25 பேர் செல்லலாம். சுற்றிப்பார்க்க ஒரு மணி நேரம்தான்.போய்ப் பார்க்க 30 நிமிடம் முன்பே அங்கு இருக்க வேண்டும். பாதுகாப்பு சோதனை உண்டு. 16 வயதுக்கு கீழே உள்ளவர்கள் அவர்களின் பாதுகாவலருடன் வரலாம். இந்த சுற்றுலாவின் போது எங்கே தங்கம் கொட்டிக்கிடக்குது என்று நேரில் பார்க்கலாம். இதில் பொது வழிகாட்டி உங்களுக்கு எல்லா இடத்தையும் விளக்கி காட்டுவார். கண்ணால் மட்டுமே அனைத்தையும் பார்த்து, ரசித்து, அனுபவித்து, கற்பனை செய்து மகிழலாம். உலகில் ஒட்டு மொத்த தங்கத்தையும் பார்ப்பது என்பதே ஒரு வரலாறுதானே. வரலாற்று சிறப்பு மிக்க மியூசியமும் உண்டு. அதனையும் சுற்றிப்பார்க்கலாம். அமெரிக்க செல்லும் வாய்ப்பு உள்ளவர்கள் திட்டமிட்டு, முன்கூட்டியே பதிவு செய்து பாத்துட்டு வந்துங்கப்பா... 









 

;