tamilnadu

img

பன்றிக்காய்ச்சல் அபாயத்தில் தென்கொரியா

வடகொரியா நாட்டில் பன்றிக்காய்ச்சல் தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் நோய் பரவும் அபாயத்தில் தென்கொரியா எச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

வடகொரியாவின் ஜகாங் பகுதியில் உள்ள பன்றிகள் வளர்ப்பு பண்ணையில் காய்ச்சல் தொற்றுகளால் 70க்கும் அதிகமான பன்றிகள் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என தென்கொரியாவின் விவசாயத்துறை கூறியுள்ளது. இதனால் தென்கொரிய அரசு மனிதர்களில் அதிக உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தும் காய்ச்சலை தடுக்க தென் மற்றும் வட கொரிய எல்லைப்பகுதிகளில் நோய் தொற்றுக்கான எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக தென்கொரிய அரசின் சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கடந்த ஆண்டு வடகொரியாவின் எல்லை நாடான சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

;