tamilnadu

img

உலகில் கொரோனா பலி எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கியது...  

தில்லி 
உலகை தனது உள்ளங்கையில் வைத்து மிரட்டி வரும் கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் தற்போது 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. ஆப்பிரிக்கா, ஓசியானிய கண்டத்தை தவிர மற்ற கண்டங்கள் கொரோனா பாதிப்பால் உருகுலைந்துள்ளன. 

இந்நிலையில், உலகில் கொரோனா பலி எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கி வருகிறது. தற்போதைய நிலவரப்படி (மதியம் 2 மணி - சனி) 5 லட்சத்து 99 ஆயிரத்து 716 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 1.42 லட்சம் பலியாகியுள்ளனர். பிரேசிலில் 77 ஆயிரம் பேரும், பிரிட்டனில் 45 ஆயிரம் பேரும் பலியாகியுள்ளனர். 

மேற்குறிப்பிட்ட நாடுகள் உலகின் கொரோனா பலி எண்ணிக்கை அட்டவணையில் முதல் மூன்று இடத்தில் உள்ளன. 4-வது இடத்தில் மெக்ஸிகோ (38 ஆயிரம்), 5-வது இடத்தில் இத்தாலி (35 ஆயிரம்), 6-வது இடத்தில் பிரான்ஸ் (30 ஆயிரம்), 7-வது இடத்தில் ஸ்பெயின் (28 ஆயிரம்), 8-வது இடத்தில் இந்தியா (26 ஆயிரம்) ஆகிய நாடுகள் உள்ளன.

பல நாடுகளில் கொரோனா நோயாளிகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் இன்று (சனி) இரவுக்குள் உலகின் கொரோனா பலி எண்ணிக்கை 6 லட்சத்தை கடக்கும் நிலை உருவாகியுள்ளது.  
 

;