tamilnadu

img

ஈரானில் விமான விபத்து: 170 பயணிகள் உயிரிழப்பு

டெஹ்ரான்:
ஈரானில், புறப்பட்ட சில நிமிடங்களில், உக்ரைன் பயணிகள் விமானம், விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், விமானத்தில் இருந்த 170 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் இண்டர்நேஷனல் ஏர்லைன்சுக்குச் சொந்தமான போயிங் 737-800 ரக விமானம், 170 பேருடன், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து, உக்ரைன் நாட்டின் கீவ் நகருக்கு, புதனன்று காலை புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், டெஹ்ரான் தெற்கு புறநகர் பகுதியில், விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான உக்ரைன் விமானத்தில் இருந்த பயணிகள், விமான சிப்பந்திகள் உட்பட 170 பேரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

;