tamilnadu

img

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 30 லட்சத்தை நெருங்குகிறது...  

நியூயார்க் 
உலகின் கொரோனா மையமாக உள்ள அமெரிக்காவில் பரவல் முறை சற்று வித்தியாசமாக உள்ளது. அதாவது மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் நடந்து செல்லும் வேகத்தில் பரவினால், அங்கு பறந்து செல்லும் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் அந்நாட்டில் தினசரி பாதிப்பு சராசரியாக 35 ஆயிரத்துக்கு மேல் உள்ளது. நாள்தோறும் 40 ஆயிரம் பேர் பாதிப்பு, 600 பேர் பலி என தினமும் கொரோனா தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினாலும், அந்நாட்டு அரசு அதனை கண்டுகொள்ளாமல் சுதந்திர தின விழாவில் சுழன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.   

இந்நிலையில் அந்நாட்டில் கொரோனா பாதிப்பு 30 லட்சத்தை நெருங்கி வருகிறது. தற்போதைய நிலையில் 29.83 லட்சம் பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர். 1.32 லட்சம் பேர் பலியாகியுள்ள நிலையில், 12.86 லட்சம் பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். குறிப்பாக அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களான நியூயார்க், கலிபோர்னியா, டெக்சாஸ், புளோரிடா, நியூ ஜெர்ஸி, இல்லினோய்ஸ்,  மாஸ்சூசெட்ஸ் ஆகிய பகுதிகளில் கொரோனா  மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதில் நியூயார்க் தான் அமெரிக்காவின் கொரோனா மையம் ஆகும். அங்கு 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 32 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனாவால் உருகுலைந்துள்ள ஐரோப்பா நாடுகள் தற்போது பரவலை கட்டுப்படுத்தி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், அமெரிக்கா மட்டும் கொரோனா எழுச்சி பெற்ற காலத்திலிருந்து  இன்று வரை வைரஸுடன் போராடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

;