tamilnadu

img

ஆப்பிரிக்க நாடுகளை துரத்தும் கொரோனா..  102 கோடி மக்கள் தொற்றால் பாதிக்கப்படலாம்

கெய்ரோ: 
கொரோனாவை தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஆப்பிரிக்க கண்டம் செயல்படுத்தாவிட்டால் அங்கு இறப்பு 33 லட்சம் வரை செல்லக் கூடும் என லண்டன் இம்பீரியல் கல்லூரியின் அறிக்கையை மேற்கோள் காட்டி இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

வைரஸை எதிர்த்துப் போராட முன்வராத மோசமான நிலையில் ஆப்பிரிக்காவில் 1.2 பில்லியன் (102 கோடி) மக்கள் தொற்றுநோய்க்கு உள்ளாகலாம்; 3.3 மில்லியன் (33 லட்சம்) இறப்புகள் நிகழலாம் என ஆப்பிரிக்காவிற்கான பொருளாதார ஆணையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளதாகவும் அச்செய்தி கூறுகிறது. இதனிடையே, "வைரஸ் புவியியல் ரீதியாக, நாடுகளுக்குள் தொடர்ந்து பரவுகிறது. தினம் தோறும் அதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது" என்று 46 துணை சஹாரா நாடுகள் மற்றும் அல்ஜீரியாவை உள்ளடக்கிய உலக சுகாதார நிறுவனஆப்பிரிக்கா பிராந்திய இயக்குநர் மாட்சிடிசோ மொயெட்டி கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தென்னாப்பிரிக்காவில் நோய்த்தொற்று அதிகம் காணப்பட்டது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின் தொற்றின் வேகம் குறைந்துவிட்டது. ஆனால் புர்கினோ பாசோ, காங்கோ ஜனநாயகக் குடியரசு, அல்ஜீரியா ஆகிய நாடுகளில் இறப்பு விகிதம் சராசரியைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் திறனை மேம்படுத்துவதிலும் இறப்புகளைக் குறைப்பதிலும் உலக சுகாதார நிறுவனம் திட்டமிட்டு பணியாற்றி வருகிறது என்றார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியை தரமறுப்பது கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் மட்டுமல்லாமல், போலியோ, எச்.ஐ.வி, மலேரியா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் தீங்கு விளைவிப்பதாக அமையும் என்றும் மொயெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.

;