tamilnadu

img

தோழர் பிஷ்ம சஹானி - காலத்தை வென்றவர்கள்

எழுத்தாளர் பீஷ்ம சஹானி ஆகஸ்டு மாதம் 8ம் தேதி 1915ல் ராவல்பிண்டி யில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) பிறந்தார். இவர் இந்தி மொழியின் பிர பலமான புனைகதை எழுத்தாளராக அறியப் படுகிறார். இவர் நாடகாசிரியராக, மொழி பெயர்ப்பாளராக பன்மொழி வித்தகராக மற்றும் ஆசிரியராகவும் பன்முகத் தன்மையோடு இருக்கி றார். இந்திய நாட்டின் பாரம்பரியம் மற்றும் தத்து வார்த்தங்கள் மீது எவ்வித பயமும் இன்றி தனது விமர்சனங்களை பதிவு செய்து உள்ளார். இவர் இந்தியா பிரிவினையின் போது ஏற்பட்ட கலவரங்கள் குறித்து எழுதிய ‘தமஸ்’ (இருள்) என்ற நாவல் 1988ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலக அளவில் பேசப்பட்டார். ‘தமஸ்’ நாவலில் பிரிவினைக் காலத்தின் மனித அவலங்கள் மற்றும் உணர்வு களை மிகச் சரியாக வெளிப்படுத்தி உள்ளார். பிரிட்டிஷாரின் பிரித்து ஆளும் கொள்கை மற்றும் இந்து - முஸ்லீம் மதத்தவர்களின் கண்மூடித்தன மான வன்முறைகளை வெளிச்சமிட்டு காட்டி உள்ளார். எந்த மதத்தினர் வன்முறையில் ஈடு பட்டாலும் பாதிக்கப் படுவது பாமர மக்கள்தான் என்பதை வெளிப்படுத்தி உள்ளார். மனிதாபி மானத்தையும் இரக்கத்தன்மையையும் எளிய மொழியில் எழுதுவது இவரது சிறப்பு.

சுதந்திரப் போராட்டத்திலும் சஹானி கலந்து கொண்டுள்ளார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது இந்திய தேசிய காங்கிர சில் இணைந்தார். மார்ச் 1947ல் ராவல்பிண்டி யில் நிவாரண குழுவினரோடு பணியாற்றினார். மும்பையில் இருந்த இந்திய நாடக அமைப்பில் (இப்டா) இணைந்து தனது சகோதரர் பல்ராஜ் சஹானியின் மேற்பார்வையில் நாடக  நடிகராக இருந்தார். ‘’பூத் காடி’’ என்ற நாடகத்தை இயக்கினார். 1950ல் தில்லி பல்கலைக் கழகத்தில் ஆங்கில மொழி பேராசிரியராக சேர்ந்தார்.

1957 முதல் 1963 வரை ரஷ்யத் தலை நகர் மாஸ்கோவில் தங்கி ரஷ்ய நூல்களை இந்தியில் மொழி பெயர்த்தார். இந்தி மட்டு மல்லாது ஆங்கிலம், உருது, சமஸ்கிருதம், ரஷ்யா மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். இவர் ரஷ்ய மொழியிலிருந்து இருபத்தைந்து நூல்களை மொழி பெயர்த்து உள்ளார்.இவர் எழுதிய சிறுகதைகள், நாட கங்கள், சிறுவர்களுக்கான படைப்புகள் ஏராளம். சஹானி பல விருதுகளும் பரிசுகளும் பெற்றுள்ளார். 1979ல் சிரோமணி எழுத்தாளர் விருதும், ‘தமஸ்’ நாவலுக்காக சாகித்திய அகடமி விருதும் உத்திரப் பிரதேச மாநில அரசு விருதும் 1975ல் வழங்கப்பட்டது. இவருடைய ‘’ஹனுசா’’ நாடகத்திற்காக மத்தியப் பிரதேச கலா சாகித்திய பரிஷத் விருது வழங்கப் பட்டுள்ளது. 1981ல் ஆப்ரோ ஆசியன் எழுத்தாளர் அமைப்பின் சார்பாக லோட்டஸ் விருதும் 1983ல் சோவியத் அரசின் நேரு விருதும் வழங்கப்பட்டுள்ளது.

பெரணமல்லூர் சேகரன்