tamilnadu

img

நவீன மருத்துவம் மூலம் கொரோனாவை 2 ஆண்டுகளில் கட்டுக்குள் கொண்டுவர முடியும்

ஜெனீவா:
கடந்த 1918-ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய ஸ்பானிஷ் ப்ளூ வைரஸ் காய்ச்சல் போல் கொரோனா வைரஸ் நீடிக்காது, இப்போதிருக்கும் தொழில்நுட்பம், நவீன மருத்துவம் ஆகியவற்றால் இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே கொரோனா வைரஸை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த 1918ஆம் ஆண்டில் உலகையே உலுக்கியது ஸ்பானிஷ் ப்ளூ வைரஸ் காய்ச்சல். ஹெ1என்1 இன்ப்ளூயன்ஸா ஏ வைரஸ் எனப்படும் இந்த வைரஸ் 1918-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் 1920-ஆம் ஆண்டு ஏப்ரல் வரை உலகை உலுக்கி எடுத்தது. உலகம் முழுவதும் இந்த வைரஸால் 50கோடி பேர்பாதிக்கப்பட்டனர். உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒருபகுதி பாதிக்கப்பட்டனர்.1.70 கோடி முதல் ஐந்து  கோடி பேர் உயிரிழந்தனர் என்று கணக்கெடுப்புகள் கூறுகின்றன. மனிதகுல வரலாற்றிலேயே மிகவும்மோசமான தொற்று என்று இன்றளவும் அஞ்சப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கதடுப்பு மருந்துகள் தீவிரமான மருத்துவப் பரிசோதனையில் இருக்கின்றன. இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் மருந்து மக்களுக்கு கிடைத்துவிடும் என நம்பப்படுகிறது.இந்தச் சூழலில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-கொரோனா வைரஸ் நூற்றாண்டுக
ளுக்கு ஒருமுறை வரும் சுகாதாரம் சார்ந்த பிரச்சனையாகும். கடந்த 1918-ஆம் ஆண்டில்ஸ்பானிஷ் ப்ளூ காய்ச்சல் பரவிய வேகத்தைவிட,  கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப்பரவுவதற்கு உலகமயமாக்கல், நெருங்கியதொடர்பு, போக்குவரத்து ஆகியவை அனுமதித்துவிட்டன.ஆனால், ஸ்பானிஷ் ப்ளூ பரவியபோது குறைந்த அளவு தொழில்நுட்பம், மருத்துவக் கண்டுபிடிப்புகள் மட்டுமே இருந்ததால், அதை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் முடியவில்லை.

கொரோனாவைத்  தடுக்கும் தொழில்நுட்பமும் அதைத் தடுக்கும் அறிவும் தற்போது நம்மிடம் உள்ளது. உலகம் முழுவதும் ஒன்றுபட்டு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் வெற்றிபெற்றால் இரண்டாண்டுகளுக்குள்ளாகவே  நாம் முடிவுக்கு கொண்டு வந்துவிட முடியும் என நான் நம்புகிறேன்.இதற்கு தேவை “தேசிய அளவிலான ஒற்றுமை”, “உலகளவிலான ஒற்றுமை” என்றார்.

மைக்கேல் ராயன் கூறுவதென்ன?
உலக சுகாதார அமைப்பின் அவசரகால பிரிவு தலைமை மருத்துவர் மைக்கேல் ராயன்கூறுகையில்,  “1918-ஆம் ஆண்டில் பரவியஸ்பானிஷ் ப்ளூ பெருந்தொற்று உலகையே அச்சுறுத்தியது. இது இலையுதிர் காலத்தில் தொடங்கியதால் தொற்றின் வேகம்அதிகமாக இருந்தது. அழிவும் அதிபயங்கரமாக இருந்தது. ஸ்பானிஷ் ப்ளூ தொற்றோடு ஒப்பிடுகையில் கொரோனாவின் பரவல் வேகம் குறைவு. ஸ்பானிஷ் காய்ச்சலால் முதலாம் உலகப்போர் பாதிப்பைக் காட்டிலும் ஐந்து மடங்கிற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். 

;