tamilnadu

img

கொரோனவால் 130 மில்லியன் மக்கள் பசியால் தவிப்பார்கள்

ஜெனீவா:
கொரோனா-வால்  ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை இந்தாண்டு கிட்டத்தட்ட இரு மடங்காக 265 மில்லியனாக இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் (WFP) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுடன் தொடர்புடைய பிற கட்டுப்பாடுகளின் தாக்கத்தால் இந்தாண்டு சுமார் 130 மில்லியன் மக்கள் கடுமையான பசிக்கு உள்ளாவார்கள். "ஏற்கனவே ஒரு நூலில் தொங்கிக்கொண்டிருக்கும் மில்லியன் கணக்கான மக்களுக்கு கொரோனா பேரழிவை ஏற்படுத்தும்" என்று உலக உணவுத் திட்டத்தின் (WFP) தலைமைப் பொருளாதார நிபுணரும் ஆராய்ச்சி, மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு இயக்குநருமான ஆரிஃப் ஹுசைன் கூறியுள்ளார்.
 

;