tamilnadu

img

நெற்பயிர்கள் சேதம்: நிவாரணம் வழங்க கோரிக்கை

திருவண்ணாமலை,ஏப்.29- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா வறட்சியான பகுதியாகும். மிக அறி தாகவே இங்கு மழை பொழியும். இதனால் விவசாயம் செய்வது சிரமமான காரியமாக உள்ளது. இருந்தாலும் விவசாயிகள் தங்க ளுடைய விளை நிலத்தில் உள்ள கிணறு மூலம் நீரை பயன்படுத்தி கார்கால பருவ நெற்பயிரை கடந்த தை மாதம் நடவு செய்து  நல்ல முறையில் பராமரித்து வந்தனர். தற்போது மகசூல் பெருகி அறுவடைக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில், திங்களன்று (ஏப். 27)   சூறாவளி இடி மின்னலுடன் பெய்த ஆலங் கட்டி கனமழையால்  அறுவடைக்கு தயாராக  இருந்த நெற்பயிர்கள் முற்றிலும் விளை நிலத்தில்  சாய்ந்தும், நெல்மணிகள் நிலத்தில்  கொட்டியும் சேதமானது. நிலத்தில் தேங்கிய  மழைநீரால், நெல் மீண்டும் முளைக்க  ஆரம்  பித்துவிட்டது. எனவே, அறுவடை செய்யமுடி யாமல் முற்றிலும் பயிர் சேதம் ஏற்பட்டு விவ சாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ள னர். பாதிக்கப்பட்ட விவசாயிகளை பாது காக்க, மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்  படையில் நேரில் ஆய்வு செய்து உரிய நிவா ரணம் வழங்க வேண்டும் என செங்கம் பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

;