tamilnadu

img

உன்னாவ் சிறுமி பாலியல் வன்கொடுமை பாஜக எம்எல்ஏ வை கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஆக.12- நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் சார்பில் உன்னாவ் சிறுமி பாலியல்  வன்கொடுமை செய்த பாஜக எம்எல்ஏவை கண்டித்து ராசிபுரம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த சிறுமியை பாஜக சட்டமன்ற உறுப்பினரால் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். பாதிக் கப்பட்ட  சிறுமி நீதி கேட்டு நீதிமன்றம் சென் றார். சமீபத்தில் இந்த சிறுமி மற்றும் வழக் கறிஞர் மீதும் வாகனம் ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்த குற்றவாளிகளை கண்டித்தும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்காமல் உள்ளதை கண்டித்து அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாதர் சங் கத்தின் ராசிபுரம் தாலுகா குழு செயலாளர்  ராணி தலைமை தாங்கினார். இதில் தாலுகா  குழு உறுப்பினர்கள் பழனியம்மாள், தாயம்மாள் உள்ளிட்ட திரளானோர் கலந்து  கொண்டனர்.

;