tamilnadu

பரமத்தி வேலூர் அருகே மணல் கடத்தி வந்த 3 லாரிகள் பறிமுதல் - மூவர் கைது

நாமக்கல், மே 16-பரமத்தி வேலூர் மற்றும் பரமத்தியில் மணல் கடத்தி வந்த மூன்று லாரிகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், அதன் ஓட்டுநர்கள் மூவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் தேசிய நெடுஞ்சாலை பாலம் அருகே பரமத்தி வேலூர் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு லாரிகளை தடுத்து நிறுத்திசோதனை நடத்தினர். இதில், பாலப்பட்டி அருகே உள்ளசெங்கப்பள்ளியில் இருந்து சேலத்துக்கு மணல் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதன் அடிப்படையில் இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், சேந்தமங்கலம், வடுகப்பட்டியைச் சேர்ந்த லாரிஓட்டுநர் ரமேஷ் (34), சேந்தமங்கலம் அருகே உள்ள பொட்டணம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (31) ஆகியஇருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல் பரமத்தி அருகே பரமத்தி காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டாரஸ் லாரியைத் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில் செங்கப்பள்ளி பகுதியில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்து, சேந்தமங்கலம், குப்பநாயக்கனூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பூபதியை (30) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;