tamilnadu

கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி விற்பனை : மூவர் கைது

தஞ்சாவூர், ஜூன் 13- தஞ்சாவூர் அருகே அம்மன்பேட்டை ரேஷன் கடையிலிருந்து அரசு வழங்கிய அரிசியை பொதுமக்களுக்கு வழங்கா மல் அதனை கள்ளச்சந்தை யில் விற்பனை செய்வதாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல்துறைக்கு, வெள்ளிக் கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆய்வாளர் செந்தமிழ்செல்வி, உதவி ஆய்வாளர் கோகுல் ஆகியோர் அம்மன்பேட்டை யில் சோதனையில் ஈடுபட்ட னர்.  அப்போது ஒரு லோடு ஆட்டோவில் 18 மூட்டை (880 கிலோ) ரேஷன் அரிசி யை கொண்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து ரேஷன் கடை பணியாளர் சங்கர் (51), ஆட்டோ டிரை வர் பாபு( 42), தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் மாவு மில் உரிமையாளர் அசோக் குமார் (58) ஆகிய மூவரை யும் கைது செய்தனர். மாவாக அரைத்து விற்பனை செய்ய ரேஷன் அரிசியை கடத்தியது விசாரணையில் தெரியவந்தது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ, ரேஷன் அரிச மூட்டை யை காவலர்கள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.