tamilnadu

img

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு மாடு முட்டியதில் எஸ்.ஐ படுகாயம்

நாமக்கல், ஜன,25- நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி சனி யன்று நடந்தது. இதில் மாடு முட்டியதில் எஸ்ஐ ஒருவர் படுகாயம் அடைந் தார்.  நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு ஆர்வலர் அமைப்பு சார்பில் ஜல்லிக் கட்டு போட்டி மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை தாங்கினார். இந்த போட்டியினை பள்ளிக் கல்வித்துறை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி. தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் வெ.சரோஜா, சுற்றுச்சுழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், கால்நடைப்பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதா கிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து 500 காளை மாடுகள் கலந்து கொண்டன. 350 மாடு பிடி வீரர்கள் கலந்து  கொண்டனர். இந்நிலையில் ஜல்லிக் கட்டு நடக்கும் இடத்தில் நாமக்கல் எஸ்பி  அருளரசு தலைமையில் 200க்கும் மேற் பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டனர். வாடிவாசல் வழியாக வெளிவந்த ஒரு காளை எல்லைக்கோட்டை கடந்து சென்றது. ஆனால் இந்த காளை வெளி யேற வழி தெரியாமல் மீண்டும் மைதானத் திற்குள் திரும்பி வந்தது. அப்போது மைதா னத்தில் பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்த எலச்சிபாளையம் எஸ்ஐ  மனோகரனை  மாடு முட்டி தள்ளியது. இதில்  அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை செய்யப் பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். 

;