tamilnadu

img

குடியரசு தின விழா கொண்டாட்டம்

நாமக்கல், ஜன. 26- நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஞாயிறன்று நடைபெற்ற 71 வது குடியரசு தினவிழா–நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சி யர் காவல் துறையினரின் அணிவகுப்பை மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் குடியரசு தினவிழாவில் பங்கேற்ற தியாகி கள் மற்றும் அவர்களின் குடும்பத்தா ருக்கு பொன்னாடை அணிவித்து சிறப் பித்தார். மேலும், சிறப்பாக பணியாற்றிய 43  காவல்துறையினருக்கு தமிழ்நாடு முதல மைச்சர் பதக்கங்களையும், 39 காவல் துறை அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றி தழ்களையும் மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 117 அரசு துறை அலுவலர்கள், பணியாளர்களுக்கு அவர் களது சிறப்பான பணியினை பாராட்டி நற் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் கா. மெகராஜ் வழங்கினார்.  இவ்விழாவில் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அர.அருளரசு, மாவட்ட வன அலுவலர் ஆர்.காஞ்சனா, மாவட்ட வரு வாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கோ.மலர்விழி, மகளிர் திட்ட இயக்குநர் டாக்டர். ரா.மணி, மாவட்ட ஊராட்சி குழுத்த லைவர் சாரதா ராஜு, மாவட்ட ஆட்சிய ரின் நேர்முக உதவியாளர் (பொது) செ.பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், தியாகிகள், தியாகிகளின் வாரிசுதாரர்கள், பயனாளி கள், பள்ளி மாணவ, மாணவியர்கள், பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்ட னர். சேலம் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடியரசு தின விழா ஞாயிறன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழா வில் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தேசி யக்கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தி, காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு, தியாகிகளை கௌரவித்து, சிறப்பாக பணி யாற்றிய காவல்துறையினருக்கு தமிழக முதலமைச்சரின் காவலர் பதக்கங்களை யும், பயனாளிகளுக்கு பல்வேறு அரசுநலத் திட்ட உதவிகளையும் வழங்கினார். தொடர்ந்து, காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதை நிறைவு பெற்றவுடன் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர் களின் வாரிசுதாரர்களுக்கு  கதர் துண்டு அணிவித்து, நினைவு பரிசு வழங்கி கௌர வித்தார். இவ்விழாவில், சேலம் மாநகர காவல் ஆணையர் த.செந்தில்குமார், சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் பிரதீப் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா காணிகர், சேலம் மண்டல மது விலக்கு அமலாக்க பிரிவு காவல் கண்கா ணிப்பாளர் ரா.சிவக்குமார், மாவட்ட வன அலுவலர் ஆ.பெரியசாமி, மாவட்ட வரு வாய் அலுவலர் ரா.திவாகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா. அருள்ஜோதி அரசன், உட்பட பல்வேறு அர சுத்துறை உயர் அலுவலர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், தியாகிகளின் வாரிசு தாரர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

;