நாமக்கல், மார்ச் 2- நாமக்கல் மற்றும் சேலத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு திங்க ளன்று துவங்கியது. நாமக்கல் மாவட்டத்தில் மேல் நிலை இரண்டாம் ஆண்டு அரசு பொதுத் தேர்வை 85 தேர்வு மையங் களில் 20,259 மாணவ, மாணவியர் கள் எழுதுகின்றனர். இதற்கான தேர்வு வினாத்தாள் 10 கட்டுகாப்பு மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வினாத் தாள் கட்டுகாப்பு மையத்திற்கு 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய பாது காவலர்கள் நியமிக்கப்பட்டு பாது காப்பு பணியில் உள்ளனர். 20 வழித்தட அலுவலர்கள் மூலம் ஆயு தம் ஏந்திய பாதுகாவலருடன் 85 தேர்வுமையங்களுக்கு வினாத் தாட்கள் ஒப்படைக்கப்பட்டன. தேர்வு மையங்களுக்கு 85 முதன் மைக் கண்காணிப்பாளர்கள், 6 கூடுதல் முதன்மைக் கண்காணிப் பாளர்கள், 85 துறை அலுவலர்கள், 3 கூடுதல் துறை அலுவலர்கள், 1,185 அறைக் கண்காணிப்பா ளர்கள் மற்றும் 260 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர். 4கண்பார்வை அற்றவர்கள், 19 மனவளர்ச்சி குன்றியோர், 25 மாற்றுதிறனாளிகள், 2 கை எலும்பு முறிவுற்றோர் தேர்வெழு துகின்றனர். இந்த 33 மாணவ, மாணவிகளுக்கு சொல்வதை எழு துபவர் நியமனம் செய்யப்பட் டுள்ளனர். இந்த மேல்நிலை தேர்வை கண்காணிக்க ஆய்வு அலுவலர்களாக சென்னை அர சுத்தேர்வுத்துறை ஆலோசகர், முதன்மைக்கல்வி அலுவலர், ஆசிரிய பயிற்சி நிறுவனத்தின் முதல்வர், மாவட்ட கல்வி அலு வலர்கள், உதவிதிட்ட அலுவ லர்கள் மற்றும் மாவட்ட உடற் கல்வி ஆய்வாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே, நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள் ளியில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு அரசு பொதுத்தேர்வு நடை பெற்ற தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் திங்களன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் உட்பட கல்வித் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சேலம்
சேலம் மாவட்டத்தில் அமைக் கப்பட்டுள்ள 130 தேர்வு மையங்க ளில் 17,048 மாணவர்களும் 20, 339 மாணவிகள் என மொத்தம் 37, 387 பேர் தேர்வெழுத உள்ளனர். இதில், 99 மாற்றுதிறனாளி மாணவ, மாணவிகளும் தேர்வெ ழுத உள்ளனர். இந்த தேர்வு மையங்களில் எதிர்பாரா பார்வை யிடும் பொருட்டு முதுகலை ஆசிரி யர்கள் நிலையில் 360 பணியாளர் கள் பறக்கும் படை குழுக்களாக நிய மிக்கப்பட்டுள்ளனர். இப்பறக்கும் படை குழுக்கள் அனைத்து தேர்வு மையங்களையும் பார்வையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, சேலம் அரசு கோட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தேர்வு நடை பெறும் மையத்தினை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் திங்ளன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய் தார். இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர் து.கணேஷ்மூர்த்தி மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.