tamilnadu

img

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மக்கள் மேடை நாமக்கல்லில் துண்டு பிரசுரம் விநியோகம்

நாமக்கல், ஜன. 27- நாமக்கல் மாவட்டத்தில் தமி ழக மக்கள் மேடையின் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத் திற்கு எதிராக கையெழுத்து இயக் கம் மற்றும் துண்டுபிரசுரம் விநியோ கம் பல்வேறு இடங்களில் நடை பெற்றது. குடியுரிமை சட்ட திருத்தத் திற்கு எதிராக நாமக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச் சிக்கு தமிழக மக்கள் மேடை  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ. ரங்கசாமி தலைமை வகித்தார். சமூக ஆர்வலர் சித்திக் முன்னிலை வகித்தார். பரமத்தியில் கே.தங்கமணி, வேலூரில் ஏ.கே. சந்திரசேகரன். ஜேடர்பாளையத்தில் கிருஷ்ணன், எருமப்பட்டி, மு.து. செல்வராஜ். கலங்கானி பேளுகுறிச்சி ராஜா முகைதீன், ராசிபுரத்தில், ஆதித்த மிழர் பேரவை மாவட்டச் செயலா ளர் மணிமாறன், குமாரபாளை யம் ஆறுமுகம் கல்லாங்கட்டுவ லசில்   எம்.ஆர்.முருகேசன், பள்ளிப் பாளையம் கொக்கராயன் பேட்டை எம்.அசோகன், திருச் செங்கோட்டில் ஐ.ராயப்பன் நாம கிரிபேட்டை என்.கே.ரவிநாத், சேந்தமங்கலம், புதுச்சத்திரத்தில் ஜோதி ஆகியோர் தலைமை தாங் கினர். மேலும், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பா. ராஜா முகமது, ஆதி தமிழர் பேரவை மாவட்டத் தலைவர் சுமன், திமுக மாவட்ட இலக் கிய அணி துணை செயலாளர் கந்த சாமி, மதிமுக நகர செயலாளர் ஜோதிபாசு, திராவிடர் விடுதலை கழக நகர செயலாளர் சேகுவேரா, தமுமுக நகர செயலாளர் கமாலு தீன், மமக நகர துணை செயலா ளர் முகமது ஷமீத்,  முத்தவல்லி, நவாப், ரஹ்மானியா பள்ளி வாசல், பெரிய பள்ளிவாசல் அலா வூதீன், மஜீத் நகர தலைவர், தமு முக மாவட்ட தொண்டர் அணி செயலாளர் உசேன், மமக துணை செயலாளர் பிலால்,சாதிக்  ஆகி யோர் கலந்து கொண்டு பொது மக்கள் மத்தியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அபாயங்கள் குறித்த துண்டு பிரசுரம் விநி யோகம் செய்தனர்.

;