நாமக்கல், நவ.2- சமூகநலத்துறை அமைச் சரின் தொகுதியான ராசி புரத்தில் மர்ம காய்ச்சல் வேக மாக பரவி வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டு மென பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த வெண் ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மின்னக்கல் மற்றும் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் வடுகம், புதுப் பட்டி, குட்டகரை, பட்டணம் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் கை மற்றும் கால் வீக்கம், மயக்கம் ஆகிய வற்றால் அவதிப்பட்டு வருகிறார்கள். மருத்துவரிடம் காண்பித்தும் காய்ச்சல் குணமாகாததால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பெரும் அச்சமடைந்துள்ள னர். மேலும், ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் குடும்பத்தில் உள்ள மற்ற அனைவருக்கும் காய்ச்சல் தொற்று பரவி விடுவதால் பெரும் இன்னலுக்குள்ளா கின்றனர். இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது என வேத னைப்படுகின்றனர். மேலும், கடந்த ஒரு வாரமாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் இந்தப் பகுதி மக்கள் அருகேயுள்ள வெண்ணந்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், நாம கிரிப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத் திற்கும் சென்று சிகிச்சை பெற்று வரு கின்றனர். இந்நிலையில் அங்கு போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை. இதுமட்டுமின்றி மருத்துவமனையே சுகா தாரமின்றி காணப்படுகிறது. இந் நிலையில் தொடர்ந்து மர்ம காய்ச்சல் நீடித்து வருவதால் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்திலும், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பொது மருத்துவ அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் புகார் அளித்தோம். ஆனால் கண்துடைப்புக்காக ஒரே முறை மட்டுமே வந்து மருந்து தெளித்துவிட்டு சென்றுவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ குழுவை உடனடியாக அனுப்பி முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.