tamilnadu

img

100 நாட்கள் வேலை திட்டத்தை அமல்படுத்துக மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஜூன் 3- பேரூராட்சி பகுதிகளில் 100 நாள் வேலைத் திட்டத்தை அமல்ப டுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் நாமகிரிப்பேட் டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். நாமகிரிப்பேட்டை பேரூராட்சி பகுதியில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர் கள் கொரோனா ஊரடங்கு காரண மாக வேலை இழந்து வறுமையில் வாடுகின்றனர். இவர்களுக்கு எந்த நிவாரண உதவியும் கிடைக்கப் பெறவில்லை. எனவே, தமிழக அரசு நல வாரிய உறுப்பினர்களுக்கு அரசு வழங்க கூடிய நிவாரண உத விகளை உழவர் பாதுகாப்பு அட்டை  வைத்துள்ள அனைத்து விவசாயத் தொழிலாளர்களுக்கும் வழங்கிட வேண்டும். பேரூராட்சி பகுதிகளில் 100 நாள் வேலைத் திட்டத்தை அமல் படுத்திட வேண்டும்.  பசி, பட்டினியில் தவிக்கக் கூடிய மக்களை பாதுகாக்க நக ராட்சிகளில் இயங்கக்கூடிய அம்மா உணவகங்களை பேரூராட்சி பகுதி களிலும் துவங்கிட வேண்டும் என் பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  நாமகிரிப்பேட்டை பேரூராட்சி வெள்ளக்கல்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாவட்டச் செயலாளர் எஸ். கந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பி னர் செல்வராசு, கிளைச் செயலா ளர் சபாபதி, பழனிவேலு, பெரியம் மாள், பாப்பாத்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;