tamilnadu

img

நாமக்கல் பண்ணைகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

நாமக்கல்:
கேரளாவில் கோழிப் பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் பரவியுள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து நாமக்கல் கோழிப்பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.தமிழகத்தில் நிலவும் சீதோஷ்ணநிலையில் பறவைக் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் கிருமி பரவ வாய்ப்பு இல்லை எனகூறப்பட்டாலும் அண்டை மாநிலங்களில் பறவைகாய்ச்சல் வரும்போதெல் லாம் தமிழக பண்ணை யாளர்கள் தங்களது பண்ணைகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்வது வழக்கம்.அந்த வகையில் அனைத்து பண்ணைகளிலும் கிருமிநாசினி கலந்த தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது. ரசாயன திரவம்கலந்த தண்ணீரில் கால்களை நனைத்த பிறகேபண்ணைக்குள் வெளிநபர்கள் அனுமதிப்படு கிறார்கள். வெளிமாநி லங்களில் இருந்து கோழித்தீவனம் ஏற்றி வரும் வாகனங்களும் கிருமிநாசினி தெளித்த பின்னரே பண்ணைக்குள் அனுமதிக்கப்படு கின்றன.

;