tamilnadu

img

முதியவா் புகார்: பேரனுக்கு கொடுத்த சொத்துகள் ரத்து

நாமக்கல், ஜன.5- நாமக்கல்லில் முதியவா்  அளித்த புகாரின் அடிப் படையில், பேரன் பெயரில் எழுதப்பட்ட சொத்துப் பத்தி ரங்களை ரத்து செய்து வரு வாய் கோட்டாட்சியா் உத்த ரவிட்டுள்ளார். நாமக்கல், நடராஜபுரம், பிள்ளையார் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நல்லு சாமி (71). இவரது மகன்  வாசுதேவன் (45). இந்நிலை யில், நல்லுசாமியின் பெயரில் உள்ள சொத்து களை வாசுதேவன் தனது மகனான சுஜித்குமார் (17) என்பவரது பெயரில் ஒப்பந்த பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டார். அதனைத் தொடா்ந்து, மகனும்,பேரனும் மது அருந்தி விட்டு  வந்து நல்லுசாமியை வீட்டை விட்டு  வெளியேறுமாறு அடித்து துன்புறுத்து வதாகவும், அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தான் எழுதிக் கொடுத்த, தான ஒப்பந்தப் பத்திரத்தை ரத்து செய்யுமாறு, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியா் அலுவ லகத்தில், கடந்த அக்டோபா் மாதம் 18-ஆம்  தேதி நல்லுசாமி மனு அளித்தார். இது தொடா்பாக வருவாய் கோட்டாட்சியா் எம். கோட்டைக்குமார் விசாரணை மேற் கொண்டார். அதன்பின், பெற்றோர் மற்றும்  முதியோர் நலவாழ்வு பராமரிப்புச் சட் டத்தின் கீழ், நாமக்கல் இணைப் பதிவாளா் அலுவலகத்தில், சுஜித்குமார் பெயரில் பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் செல்லாது என கோட்டாட்சியா் உத்தரவிட்டார். மேலும்,  நல்லுசாமி பெயரிலேயே அந்த சொத்துப்  பத்திரங்கள் தொடா்வதற்கான உத்தர வையும் அவா் வழங்கினார். நல்லுசாமி வசிக்கும் பகுதியில் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் ஏதேனும் தொந்தரவுகள், மிரட்டல்கள் உள்ளனவா என ரோந்து செல்லும் போலீஸார் விசா ரணை மேற்கொள்ளவும் நாமக்கல் வரு வாய் கோட்டாட்சியா்  உத்தரவிட்டார். 

;