tamilnadu

மற்றொரு செவிலியரை விசாரிக்க முடிவு

ராசிபுரம்,மே 12-ராசிபுரம் குழந்தைகள்விற்பனை விவகாரத்தில்தொடர்புடைய, சேலத்தை சேர்ந்த உதவி செவிலியர் சாந்தியை காவலில் எடுத்துவிசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியகுழந்தைகள் விற்பனை விவகாரம் தொடர்பாக, ஓய்வுபெற்ற செவிலியர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உட்பட 8 பேர்கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.அவர்களிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், சேலத்தை சேர்ந்தஉதவி செவிலியர் சாந்தி என்பவருக்கும் குழந்தை விற்பனையில் தொடர்பிருப்பதுதெரியவந்தது. இதையடுத்து சாந்தியை கைது செய்து,நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திநீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். அவர் 5 குழந்தைகளை வாங்கி விற்பனை செய்ததை ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியானது.இதையடுத்து அவரை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.