tamilnadu

img

கால்நடை மருத்துவரைக் கண்டித்து சிபிஎம் முற்றுகைப் போராட்டம்

நாமக்கல், ஜுலை 17- திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையத்தில் கால் நடை மருத்துவரைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் கால்நடை மருத்துவமனை இயங்கி வருகிறது.

இம்மருத்துவமனையில்  பாலாஜி (45) என்பவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்நி லையில், வெள்ளியன்று எலச்சிபாளையத்தை சேர்ந்த விவசாயிகள் இருவர், பிரதமர் கிஷான் திட்டத்தில் கால்ந டைகளுக்கு தீவனங்களுக்கான கடன் பெற மருத்துவரிடம் சென்றிருந்தனர்.

அப்போது மனுவை வாங்க மறுத்த மருத்து வர், அவர்களை மருத்துவமனையை விட்டு வெளி யேறுமாறு மிரட்டியுள்ளார்.  இதனையறிந்த மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் அப்ப குதி மக்கள் மருத்துவரின் செயலை கண்டித்து, மருத்து வமனை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர்.

இதையடுத்து எலச்சிபாளையம் காவல்து றையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும், மருத்து வரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில்,  மருத்துவர் பாலாஜி சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த தோடு பயனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். முன்னதாக, இம்முற்றுகை போராட்டத்தில் மார்க் சிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி.சுரேஷ், கே.எஸ்.வெங்கடாசலம், ஆர்.ரமேஷ், கிளை செயலாளர் பி.ஜெயந்தி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;