நாமக்கல், மார்ச் 12- கொரோனா வைரஸ் தொற்று ஏற் பாடாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவ டிக்கை குறித்து நாமக்கல்லில் அனைத்து துறை அலுவலர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கா.மெக ராஜ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் கண்டவர்கள் தும்மும்போதும், இருமும்போதும் வெளிப் படும் நீர்த்திவலைகள் மூலம் பரவுகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், கிருமி நாசினி தெளித்தல் மற்றும் கைகழுவும் முறைகள் குறித்தும் விரிவான செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. பொது மக்கள் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும். இளநீர், ஓ.ஆர்.எஸ், கஞ்சி போன்ற நீர்சத்து மிகுந்த ஆகாரங் களை பருக வேண்டும். வேலை நிமித்தமாக வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய உடன் தவறாமல் கைகளை சோப்பினால் கழுவும் பழக்கத்தை வழக்கமாகக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலு வலர் துர்கா மூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செ.பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு.சாந்தி, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு.எஸ். சோமசுந்தரம் உட்பட அரசுத்துறை அலுவ லர்கள் கலந்துகொண்டனர்.