tamilnadu

img

இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு துவக்கம் கொடியேற்றி உற்சாக கொண்டாட்டம்

நாமக்கல், அக்.17- இந்திய கம்யூனிச இயக்கத் தின் நூற்றாண்டு துவக்க நிகழ் வாக வியாழனன்று கொடி யேற்றி உற்சாகமாக கொண்டாட் டப்பட்டது. 1920ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தாஷ்கண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை துவங்கப்பட்டது. இதனை யொட்டி அதன் நூற்றாண்டு விழா  நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொண் டாடப்பட்டு வருகிறது. இதன்  ஒரு பகுதியாக வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நாமக்கல் மாவட்டக்குழு அலுவலகத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது. இவ்விழா விற்கு மாவட்டக்குழு உறுப் பினர் பி.ராமசாமி தலைமை தாங்கினார். மாவட்டச் செய லாளர் எஸ்.கந்தசாமி கட்சி கொடி யினை ஏற்றி வைத்தார். மாவட்டக் குழு உறுப்பினர் கு.சிவராஜ், அலு வலகச் செயலாளர் யு.பெருமாள் உள்ளிட்ட திரளானோர்   கலந்து கொண்டனர். இதேபோல் மாவட்டம் முழு வதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நூற்றாண்டு கொடி யேற்று விழா எழுச்சியுடன் நடை பெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு, ஒன்றிய, நகரக்குழு உறுப் பினர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

தருமபுரி 
தருமபுரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் கொடி யேற்றுவிழா நடைபெற்றது.  இதில் செங்கொடிபுரத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியச்  செயலாளர் ஆர்.ஜோதிபாசு தலைமைவகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாரி முத்து கொடியேற்றிவைத்தார். மாவட்டசெயற்குழு உறுப்பி னர்கள் டி.எஸ்.ராமச்சந்திரன், சோ.அருச்சுணன், நல்லம்பள்ளி ஒன்றியச் செயலாளர் கே.குப்பு சாமி, மாவட்டகுழு உறுப்பி னர்கள் கே.பூபதி, ஆர்.எழில்அரசு  மற்றும் பி.சங்கர், கார்த்தி கேயன், மீனாட்சி ஆகியோர் பங்கேற்றனர். இதேபோல் பென்னாகரம், தருமபுரி ஒன்றியம், அரூர் ஆகிய பகுதிகளில் கொடியேற்றுவிழா நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

சேலம்
சேலத்தில் மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டக்குழு அலுவலக மான சேலம் சிறைத்தியாகிகள் நினைவகத்தில் மாவட்டச் செய லாளர் பி.ராமமூர்த்தி தலைமை யில் கொடியேற்றுவிழா நடை பெற்றது. இதில் மூத்த தோழர் டி.சேஷகிரி செங்கொடியினை ஏற்றிவைத்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குண சேகரன், எம்.சேதுமாதவன், மாவட்டக் குழு உறுப்பினர் பி. சந்திரன், ஜங்சன் கிளை செய லாளர் முகமது அலி, பி.தங்க வேலு, யூசுப் ,ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல், சேலம் தாலுகா, சேலம் மேற்கு மாநகரம், சேலம்  வடக்கு மாநகரம், சேலம் கிழக்கு  மாநகரம், ஆத்தூர், மேட்டூர்,  வாழப்பாடி, பெத்தநாயக்கன் பாளையம், கெங்கவல்லி, ஏற் காடு, சங்ககிரி, எடப்பாடி, கொங்கணாபுரம், நங்கவள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங் களிலும் நூற்றாண்டு கொடி யேற்றுவிழா எழுச்சியுடன் நடை பெற்றது.

;