tamilnadu

img

நான் பாஜகாவுக்கு செல்லவில்லை..நடிகை குஷ்பு விளக்கம்

புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.இதனைத் தொடர்ந்து அதனை வரவேற்பதாக  நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.புதிய கல்விக் கொள்கையின் பல அம்சங்களை காங்கிரஸ் எதிர்க்கும் நிலையில்,காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு அதனை வரவேற்பதாக சொல்வது ,சமூக ஊடங்களில் பல சர்ச்சைகளை கிளப்பியது.

இந்நிலையில் நடிகை குஷ்பு  இதற்கு விளக்கம் அளித்து,மீண்டும் குஷ்பூ டிவிட் செய்துள்ளார். அதில், புதிய கல்விக்கொள்கையில் தனது நிலைப்பாடு, கட்சியிலிருந்து வேறுபடுகிறது என்றும், அதற்காக நான் ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்கிறேன்.ஆனால் நான் தலையை ஆட்டும் ரோபோ அல்லது கைப்பாவையாக இருப்பதை விட உண்மையை பேசுகிறேன் என தெரிவித்துள்ளார்.  எந்தவொரு மசோதா அல்லது வரைவு குறித்து வேறுபட்ட கருத்துக்கள் இருக்கும் எனவும், தான் ஜனநாயகத்தை முழுமையாக நம்பும் ஒருவர் எனவும், கருத்து வேறுபாடு இருப்பது நல்லது என்று நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே  நான் பாஜகவுக்கு செல்லவில்லை எனவும்,புதிய கல்விக்கொள்கையில் சில இடங்களில் குறைகள் இருப்பினும், மாற்றத்தை நேர்மறையுடன் பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.அரசியல் என்பது சத்தம் போடுவது மட்டும் அல்ல ,சேர்ந்து செயல்படுவது தான் என பாஜக புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.