tamilnadu

img

நாகர்கோவில் பாலியல் வழக்கில் சிபிசிஐடி மெத்தனம்... விசாரணையை துரிதப்படுத்த சிபிஎம் வலியுறுத்தல்

நாகர்கோவில்:
நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து பணம்பறித்துள்ள நாகர்கோவில் காசி பாலியல் வழக்கில் மெத்தனப்போக்கை கைவிட்டு குற்றவாளிகள் தப்பிக்க இடமளிக்காமல் விசாரணையை துரிதப்படுத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் நாகர்கோவிலில் வெள்ளியன்று கோவிட் கட்டுப்பாடுகளை பின்பற்றி நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அண்ணாதுரை தலைமைவகித்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினரகள் பங்கேற்றனர்.

\கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசு விவசாயிகளின் உரிமைகளைப் பறிக்கும் வகையிலும் மாநில உரிமைகளை பறிக்கும் வகையிலும் வேளாண் திருத்த சட்டங்களை நிறைவேற்றியுள்ளதை மாவட்டக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தசட்டத்தை திரும்ப பெறமத்திய அரசை வலியுறுத்திஅனைத்துக் கட்சிகள் சார்பில் செப்.28 திங்களன்றுநடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பெரும்திரளான மக்களை பங்கேற்கச் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் வழக்கு
நாகர்கோவிலைச் சேர்ந்த காசி, பள்ளி மாணவிகள் முதல் பெண் மருத்துவர் வரை பாலியல் வன்கொடுமைசெய்து அவற்றை பதிவு செய்து பணம் பறித்ததாக புகார்கள் பதிவாயின. கைதுசெய்யப்பட்ட காசி மீதுகுண்டர் சட்டம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி காவல்துறையினர் மெத்தனமாக நடத்தி வருவது அவனது கூட்டாளிகள் விடுவிக்கப்படுவதன் மூலம்தெரிந்து கொள்ள முடிகிறது.இதே போக்கு நீடித்தால் விரைவில் காசியின் விடுதலைக்கும் வழிவகுப்பதாகிவிடும். குற்றவாளிகளுடன் கூட்டாக செயல்பட்ட ஊரறிந்த நபர்களை சிபிசிஐடி விசாரித்ததாகவும் தகவல் இல்லை. எனவே, முறையாக விசாரணை நடத்தி விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். குற்றத்தில் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறுதீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

;