சீர்காழி, ஜூலை 26- நாகை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு நீர் மேலாண்மை பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் தலைமை வகித்தார். வட்டார வேளாண் அலுவலர் விவேக் வரவேற்றார். சிக்கல் வேளாண் அறிவியல் பேராசிரியர்கள் மதிவாணன், ரகு, வேளாண் பொறி யாளர் ராஜேந்திரன், தோட்டக்கலை அலுவலர் கல்யாணம், வேளாண் உதவி அலுவலர்கள் வேதையராஜன், பாலச்சந்திரன், சவுந்தர்ராஜன், மகேஷ் மற்றும் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண் உதவி அலுவலர் பாலச்சந்திரன் நன்றி கூறினார்.