tamilnadu

img

தொடர் மழையால் அரசு தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது

தரங்கம்பாடி, அக்.29- நாகை மாவட்டம் திருக்க டையூர் அருகே டி.மணல் மேடு ஊராட்சிக்கு உட்பட்ட காடுவெட்டி கிராமத்தில் அரசு தொகுப்பு வீடு தொடர் மழையால் இடிந்து விழுந்தது. காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை மகன் ராமு என்பவர் தொகுப்பு வீட்டில் குடும்பத்து டன் வசித்து வந்தார். தற்பொழுது வடகிழக்கு பருவ மழை தொடங்கிப் பெய்து வருகின்ற நிலையில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ராமுவின் தொகுப்பு வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த பாத்திரங்கள், கேஸ் சிலிண்டர், வீட்டு உபயோ கப் பொருட்கள் முற்றிலும் சேதமடைந்தன. மேலும் மேற்கூரை இடிந்து விழும் போது வீட்டிற்குள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்ட வசமாக அனைவரும் உயிர் தப்பினர்.  மேலும் காடுவெட்டி, இரவனியன் கோட்டகம் ஆகிய ஊர்களில் 20 க்கும் மேற்பட்ட அரசு தொகுப்பு வீடுகள் உள்ளன. இந்த ஆண்டு பருவ மழை பெய்து வருவதால் வீடுகளின் மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தும் காங்கிரீட் இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மேற்கூரை வழி யாக மழைத் தண்ணீர் வீட்டுக்குள் கசிகிறது. இதனால் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இத னால் தொகுப்பு வீடுகளில் நாங்கள் வாழ்வதற்கு மிக வும் சிரமப்பட்டு வருகிறோம். இதனைச் சரி செய்யச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கூறினர்.

;