சீர்காழி, மே 6- நாகை மாவட்டம் சீர்காழி அருகே கற்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சாமு என்பவரின் மனைவி மீனாட்சி (55) கூலித் தொழி லாளி. இவர் தனது மனநலம் பாதிக்கப்பட்ட ஒரே மகனுடன் தமிழக அரசால் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிக் கொடுக்கப்பட்ட கான்கிரீட் வீட்டில் குடியிருந்து வந்தார். இந்நி லையில் தனது மகனுடன் செவ்வாய் காலை வீட்டிற்கு வெளியே உட்கார்ந்து மகனுக்கு மீனாட்சி உணவு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கான்கிரீட் வீடு முற்றிலும் இடிந்து விழுந்தது. இது குறித்து தகவலறிந்த கொள்ளிடம் ஒன்றி யக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று வீட்டை இழந்த மீனாட்சியிடம் நிவாரண உதவி வழங்கி னார். ஒன்றிய தி.மு.க செயலாளர் செல்லசேது ரவிக்குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். புதிதாக அரசின் கான்கிரீட் வீடு கட்டித் தருவதாக ஒன்றியக்குழு தலைவர் உறுதிய ளித்தார்.