tamilnadu

img

கால்நடை மருத்துவமனையை தேடிச் செல்லும் வினோத பசு மாடு

சீர்காழி, ஏப்.2- நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளுர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜெயராமன். இவர் வளர்த்து வரும் ஒரு பசு மாட்டிற்கு கடந்த 2001-ஆம்ஆண்டு மாதிரவேளுரிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கருப்பூர் கிராமத்தில் உள்ள அரசு கால்நடைமருத்துவமனைக்குச் சென்று முதன் முதலாக கருவூட்டல் ஊசி போட்டார். இதனைத் தொடர்ந்து கன்றை ஈன்றது இந்த பசு. இதன்பின் சில மாதம் கழித்து மீண்டும் அந்த பசு மாடு,முன்பு சென்ற கருப்பூர் கிராம கால்நடை மருத்துவமனைக்குத் தன்னிச்சையாகச் சென்று தடுப்பூசி போடும்இடத்திலேயே நின்றிருந்தது. இதைப் பார்த்த மருத்துவர், அந்த மாட்டின் உரிமையாளருக்கு இதுகுறித்து தகவல்தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஜெயராமன் அங்குச் சென்று பசுவை வீட்டுக்கு ஒட்டி வந்தார். ஆனால் இச்சம்பவம் இதோடு நின்றுவிட வில்லை. இது வழக்கமாகத் தொடர்ந்தது தான் அப்பகுதி மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த14 வருடங்களில் 6 கன்றுகளை இந்த பசு ஈன்றிருக்கிறது. அமைதியான இந்த பசு, யாருடைய உதவியும் இன்றி3 கிலோ மீட்டர் தூரம் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்குச் சென்று வருவது தான் எங்களுக்கு ஆச்சரியப்படுத்தி உள்ளது. கருவூட்டலுக்குத் தான் செல்கிறதா, இல்லை வேறு ஏதாவது காரணம் இருக்குமா என்று எங்களுக்கு தெரியவில்லை என்றனர்.

;