தரங்கம்பாடி செப்.21- நாகை மாவட்டம், பொறையார் த.பே.மா.லு கல்லூரியில் சீகன்பால்கு தமிழ்ப் பேரவை சார்பில் முத்தமிழ் விழா வெள்ளியன்று கல்லூரி முதல்வர் ஜீன்ஜார்ஜ் தலைமை யில் நடைபெற்றது. கவிஞர் நந்தலாலா, “அகப்பொறியின் திறவுகோல்” என்ற தலைப்பில் இலக்கிய உரையாற்றி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழை வழங்கினார். கல்லூரி துணை முதல்வர் ஜான்சன் ஜெயக்குமார் தமிழ்த்துறை தலைவர் முனைவர் பிரித்தா ஜாஸ்மீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.