tamilnadu

img

தமிழ் வளர்ச்சிக் கருத்தரங்கம்

நாகப்பட்டினம், நவ.1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாகை மாவட்டக் குழு சார்பில் கீழ்வேளூர் ஒன்றி யம், தேவூர் திருமலை மகா லில் தமிழ் வளர்ச்சிக் கருத்த ரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  கருத்தரங்கத்திற்கு சி.பி.எம். கீழ்வேளூர் ஒன்றியச் செயலாளர் ஜி.ஜெயராமன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி, மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.முருகை யன், மாவட்டச் செயற்குழு  உறுப்பினர்கள் பி.சீனிவா சன், எஸ்.துரைராஜ், ஜி.ஸ்டா லின், எம்.முருகையன், த. லதா, ஏ.வி.சிங்காரவேலன், பி.மாரியப்பன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். கடலூர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு தமிழ் மொழியின் சிறப்பு பற்றியும், தமிழர்களின் தொன்மையான கீழடி அகழ் வாய்வு பற்றியும் சிறப்பு ரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் வி. அம்பிகாபதி, பி.டி.பகு, எம்.என்.அம்பிகாபதி, ஏ.வேணு, பி.கே.ராஜேந்திரன், என்.எம்.அபுபக்கர், எம்.செல்வ ராஜ், எஸ்.சுபாதேவி, சி.மேக நாதன், எம்.ஜெயபால், ப.சுபாஷ் சந்திரபோஸ், சி. விஜயகாந்த், செந்தில்குமார்,  கடலோரப் பிரதேசக்குழுச் செயலாளர் டபிள்யு.ஜான், நாகை நகரப் பொறுப்புச் செய லாளர் சு.மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தேவூர் கிளைச் செயலாளர் டி. கிருஷ்ணன் நன்றி கூறினார். முன்னதாக மக்களிசைப் பாடகர் எஸ்.மோகன் இங்கர் சால் இயக்கப் பாடல்கள் பாடினார்.