tamilnadu

img

பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்

தரங்கம்பாடி: நாகை மாவட்டம் செம்பனார்கோவிலில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. செம்பை  வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற விழாவில் செம்பனார் கோவில் கடைவீதியில் உள்ள அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கி பேசினார். ஒன்றிய தலைவர் நந்தினி ஸ்ரீதர், துணை தலைவர் பாஸ்கர், பி.எம் ஸ்ரீதர் மற்றும் திமுக ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினகள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.