tamilnadu

img

ஊராட்சித் தலைவர்களின் அதிகாரங்களைப் பறிக்கும் நாகை ஆணையரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், ஜூலை 30- நாகப்பட்டினம் ஒன்றியத்திலுள்ள கிராம ஊராட்சித் தலைவர்களின் சட்டப்படியான அதிகாரங்களைப் பறித்து, ஆளுங்கட்சியினரின் ஆதரவாக செயல்படும் நாகை ஊராட்சி ஒன்றிய ஆணையர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை ஒன்றியச் செயலாளர் பி.டி.பகு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி விளக்கவுரையாற்றினார்.  மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து கண்டன உரையாற்றுகையில், “கிராம ஊராட்சித் தலைவர்களைச் செயல்பட விடாமல், உள்ளாட்சி ஜனநாயகம் மற்றும் மக்களுக்கு எதிரான நாகை ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் வட்டார அலுவரின் ஆணவ அதிகாரப்போக்கு இனியும் தொடருமானால், பெரிய போராட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி மேற்கொள்ள நேரிடும் என்றனர். மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.கே.ராஜேந்திரன், எம்.சுப்பிரமணியன், கே.செந்தில்குமார், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் எஸ்.என்.ஜீவாராமன், நாகை ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் (சி.பி.எம்.) என்.வடிவேல், விமலா ராஜா, தீபா மாரி முத்து, கோமதி ஜீவாராமன் மற்றும் பி.மகாலிங்கம், கே. மாரிமுத்து, இ.பூங்கொடி, ஏ.கண்ணையன், பி.சுகுமாறன், ஏ.கே.குமார், ஏ.வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;