tamilnadu

img

பொறையாறு சர்மிளா பள்ளி 100 சதவிகித தேர்ச்சி

தரங்கம்பாடி, ஏப்.22-+2 பொதுத்தேர்வில் பொறையாறு சர்மிளா காடஸ் எஸ்.எம்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளது. அனைத்து மாணவ மாணவிகளும் உயிரியல் பிரிவில் மட்டுமே வகுப்பு சராசரி 494 பெற்றுள்ளனர். சங்கரராமன் 568-600, அர்ச்சனா 566- 600, சத்தியநாராயணன் 561-600 என பள்ளியின் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர். 550 மதிப்பெண்களுக்கு மேல் 3 மாணக்கர்களும் 500 க்கு மேல் 11 மாணக்கர்களும் பெற்றுள்ளனர். அர்ச்சனா என்ற மாணவி தமிழ்ப்பாடத்தில் 99 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார். 89மூ வகுப்பு சராசரி பெற்று ஆங்கிலத்துறை முதலிடத்தையும், 86மூ பெற்று தமிழ்த்துறை இரண்டாமிடமும், 84மூ பெற்று வேதியியல் துறை மூன்றாமிடமும் பிடித்தன. அனைத்துத் துறைகளின் வகுப்பு சராசரி 83 சதவிகிதம் என தெரிவிக்கப்படுகிறது. பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளும் நல் மதிப்பெண்கள் பெற்று அதிக சராசரி பெற வைத்த ஆசிரியப் பெருமக்களையும், மாணவ மாணவிகளையும் பள்ளி முதல்வர் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர். 

;