tamilnadu

img

பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சி  

பொன்னமராவதி: பள்ளி பரிமாற்ற திட்டத்தின் கீழ் வட்டார கல்வி அலுவலர்கள் பால்டேவிட் ரோசாரியோ ராஜாசந்திரன் ஆகியோர் தலைமையில் அரசு பள்ளியின் கிராமப்புற மாணவர்கள் புதுக்கோட்டை பொன்னமராவதி நகரத்தில் உள்ள அரசு அஞ்சலகம், சார்-பதிவாளர் அலுவலகம், காவல் நிலைய செயல்பாடு பற்றி அறிந்தனர். காவல் ஆய்வாளர் கருணாகரன், துணை ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர் காவல் நிலைய நடைமுறை, செயல்பாடு பற்றி விளக்கினர். வார்ப்படு அரசு உயர்நிலைப்பள்ளி, ஆலம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி, கல்லம்பட்டி நடுநிலைப்பள்ளி, கட்டையாண்டிபட்டி நடுநிலை பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

;