மயிலாடுதுறை, டிச.10- மயிலாடுதுறை மன்னன்பந்தல் ஏவிசி கல்லூரியில் சாகித்ய அகாதெமியும் ஏவிசி கல்லூரித் தமிழாய்வுத் துறையும் இணைந்து நிகழ்த்தும் `தமிழ் இலக்கி யத்தில் புலம் பெயர்வு’ என்னும் இருநாள் கருத்தரங்கின் தொடக்க நிகழ்வு நடை பெற்றது. இந்நிகழ்வுக்கு சாகித்ய அகாதெமி தமிழ் ஆலோசனைக் குழுவின் ஒருங்கி ணைப்பாளர் சிற்பி பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். சாகித்திய அகாதெமி தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர் சா.கந்த சாமி மையக் கருத்துரை நிகழ்த்தினார். முதல்வர் டாக்டர் இரா.நாகராஜன் தொடக்க வுரையாற்றினார். சாகித்ய அகாதெமி தமிழ்ப்பிரிவு பொறுப்பு அலுவலர் சந்திரசேகரராஜு வர வேற்புரை நிகழ்த்தினார். தமிழாய்வுத் துறைத் தலைவர் முனைவர் சு.தமிழ்வேலு நன்றி கூறினார். தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்க முதல் அமர்வினை தமிழவன் தலைமை யேற்று `குடிபெயர்தலும் இலக்கிய ஆக்கமும்– புதிய பரிமாணங்கள் என்னும் தலைப்பில் உரைநிகழ்த்தினார். கே.நல்ல தம்பி `தமிழ் - கன்னடப்புலம் பெயர்வு இலக்கி யம் என்னும் தலைப்பினிலும் சு.ஆ.வெங்கட சுப்புராயநாயகர் `புதுச்சேரியில்புலம் பெயர்வு இலக்கியம்– பிரெஞ்சு மொழியி னரை முன்வைத்து’ என்னும் தலைப்பினி லும் உரை நிகழ்த்தினார்கள். இரண்டாவது அமர்விற்கு தலைமை வகித்த மூத்த பத்திரிகையாளர் மாலன் காலனிய மும் புலம் பெயர்தலும் என்னும் தலைப்பினில் உரை நிகழ்த்த. `தமிழில்புலம் பெயர்வு இலக்கியம்– மியான்மர்’ என்னும் தலைப்பினில் இரா.குறிஞ்சிவேந்தன், `ஈழமலையகத்தமிழ் இலக்கியம்என்னும் தலைப்பினில்தமிழ்மகன், `எனதுநாவல் அனுபவமும் தமிழில் மலேசியப்புலம் பெயர்வுஇலக்கியமும் என்னும் தலைப்பி னில் இன்பாசுப்ரமணியன் ஆகியோர் உரைநிகழ்த்தினார்கள். சுபாசுசந்திரபோசு– சிலப்பதிகாரத்தில் புலம்பெயர்வுஎன்னும் தலைப்பில்உரையாற்றினார். சுப்ரபாரதிமணியன்- புலம்பெயர்வில் என் இலக்கிய அனுபவங்கள், சி.மோகன்- தென்கிழக்காசிய நாடுகளில் புலம்பெயர்வு: ப.சிங்காரத்தின் படைப்புகளை முன்வைத்து, இரத்தின வேங்கடேசன்- தமிழில்புலம் பெயர்வு இலக்கியம்– சிங்கப்பூர் என்னும் தலைப்புகளில் உரையாற்றினார். நான்காம் அமர்வில் சந்தியாநடராஜன்–சாயாவனம்- புலம்பெயர்வும் மறுபுலம்பெயர்வும் சு.தமிழ்வேலு- தமிழ்ச் செவ்விலக்கியத்தில் புலம்பெயர்வு, ச.சாமுவேல்ஆசிர்ராஜ்- தமிழ்நாட்டில் அகப்புறப்புலம் பெயர்வு என்னும்தலைப்புகளில்உரையாற்றினர். ஐந்தாம் அமர்வில் கி.இரா.சங்கரன்– தமிழ் புலம் பெயர்வு இலக்கியத்தின் வரலாற்றுப் பின்புலம். கல்பனாசேக்கிழார்- நாடு விட்டு நாடு–ஒருசுயசரிதை.சி.மோகன்-தென் ்கிழக்காசியநாடுகளில் புலம்பெயர்வு பா. சிங்காரத்தின் படைப்புகளை முன்வைத்து என்னும் தலைப்புகளில் உரையாற்றினர். உதவிப் பேராசிரியர் முனைவர் சு.விமல்ராஜ் தொகுப்புரை வழங்கினார். திரளான மாண வர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.