tamilnadu

img

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேரணி- ஆர்ப்பாட்டம் தரங்கம்பாடியில் 8 ஆயிரம் பேர் பங்கேற்பு

தரங்கம்பாடி, ஜன.19- நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், இலுப்பூர் சங்கரன்பந்தலில் மதரீதியாக இந்தியர்களை பிளவுபடுத்தும் குடி யுரிமை சட்டத்தை ரத்து செய்யக் கோரி இலுப்பூர், சங்கரன்பந்தல், சேந்தமங்கலம் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் கண்டன பேரணி, ஆர்ப்பாட்டம் ஞாயிறன்று பள்ளி வாசல் தெருவில் நடைபெற்றது.  அரசியலமைப்புக்கு எதிரான குடி யுரிமை திருத்த சட்ட மசோதாவை கண் டித்தும், அதை திரும்பப் பெறக் கோரி யும் அனைத்து இஸ்லாமிய அமைப்பினர் தேசியக் கொடியை ஏந்தி பேரணியில் ஈடு பட்டனர். பேரணி முடிவில் நாகை மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை செயலாளர் சாகுல் ஹமீது ரஹ்மானி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா மகாசபை பொதுச் செயலாளர் அன்வர் பாதுஷா உலவி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் மாநில துணை செய லாளர் சுந்தரவள்ளி, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைவர் ஜெய ராமன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் மாவட்ட செயலாளர் பெரியார் செல்வம் ஆகியோர் மத ரீதியாக இந்தியர்களை பிளவுபடுத்தும் மத்திய- மாநில அரசு களை கண்டித்து உரையாற்றினர். திமுக வடக்கு மாவட்ட செயலாளர் நிவேதா முருகன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் டி.இராசையன், திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஞான வேலன், செம்பனார்கோவில் ஒன்றிய தலை வர் நந்தினி ஸ்ரீதர், செம்பை தெற்கு ஒன்றிய திமுக அப்துல்மாலிக் உள்ளிட்ட அனைத்து ஜமா அத் கூட்டமைப்பை சேர்ந்த மயிலாடு துறை, நீடூர், நாகை மற்றும் 30 க்கும் மேற் பட்ட பகுதிகளைச் சேர்ந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அனைத்து சமு தாயத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

;