tamilnadu

img

காவல்துறை விசாரணைக்கு சென்ற இளைஞர் தற்கொலை : நீதிக் கேட்டுப் போராட்டம்

தரங்கம்பாடி, ஜூன் 6- நாகை மாவட்டம், குத்தாலம் அருகே காவல் நிலையத்துக்கு விசாரணைக் காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் வீட்டிற்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குத்தாலம் அருகேயுள்ள பாலையூர்  காவல் எல்லைக்குட்பட்ட நல்லாவூர் கீழத்தெருவில் வசித்து வரும் ரெங்க நாதன் என்பவரின் மகன் முரளி இவ ருக்கு வயது -26. அதே ஊரைச் சேர்ந்த மாதவன் த/பெ.லோகநாதன், கோவிந்த ராஜன் ஆகியோர் பாலையூர் காவல் நிலையத்தில் போலீஸ் நண்பர் குழு வில் பணியாற்றுகின்றனர். இதனிடை யே அதே பகுதியில் உள்ள முருகன் என்பவருக்கும் மாதவனுக்கும் இடம் பிரச்சனை சம்பந்தமாக தகராறு ஏற்படுகிறது. ஏற்கனவே மாதவனுக்கும் முர ளிக்கும் உள்ள முன்விரோதம் காரண மாக முரளியை இப்பிரச்சனை சம்பந்த மாக விசாரிக்க சொல்லி ஆய்வாளர் வேலுதேவியிடம் கூறியுள்ளார்.

அதன் பேரில் 04/06/2020 அன்று இரவு பாலை யூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற ஆய்வாளர் விசாரித்ததாக கூறப் படுகிறது. இந்நிலையில் மறுநாள் அன்று வீட்டிலிருந்த முரளி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அப்பாவி இளைஞரை காரணமின்றி விசாரணைக்கு அழைத்து சென்று என்ன சொல்லி மிரட்டினாரோ ? என கதறிய அவரது குடும்பத்தினர் அவரது உடலை வாங்க மறுத்து மயிலாடுதுறை மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்கொலைக்கு காரண மான ஆய்வாளர் வேலுதேவி மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவ டிக்கை எடுக்க வேண்டும். தற்கொலை குறித்து உரிய விசாரணை செய்ய வேண்டும். போலீஸ் நண்பர் குழுவில் பணியாற்றும் மாதவன், கோவிந்த ராஜன் ஆகியோர் பெயரையும் கொலை வழக்கில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஸ்டாலின், ஒன்றிய செயலாளர்கள் விஜயகாந்த்( குத்தாலம்), மேகநாதன் (மயிலாடு துறை), வட்டக்குழு உறுப்பினர் மாரி யப்பன், நல்லாவூர் கிளை செயலாளர் ஜெயராஜ் ஆகியோர் தற்கொலைக்கு நீதி கேட்டு முரளியின் குடும்பத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

;