சீர்காழி, ஜூலை 26- கொள்ளிடம் அருகே குத்தவக்கரை கிராமத்தில் அழிஞ்சி யாறு வடிகால் மதகின் கதவணையை சரி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே குத்தவக்கை கிரா மத்தில் கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலை குறுக்கே அழிஞ்சியாறு வடிகால் வாய்க்காலில் கதவணை கட்டப்பட் டுள்ளது.இந்த கதவணை மதகு ஆற்றங்கரை சாலையின் ஓரத்தில் போதிய உயரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இத னால், சாலையின் ஓரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்வோர்கள் அச்சத்துடனேயே செல்கின்றனர். கதவணை மதகிலிருந்து ஆற்றின் உள்பகுதிக்கு சுமார் 40அடி தூரம் இருப்பதால், தவறி விழும் பட்சத்தில் பெரும் விபத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. கடந்த ஒரு வருடத்தில் இந்த மதகில் அமர்ந்திருந்தபோது தவறி ஆற்றுக்குள் விழுந்து மாதிரவேளுர் மற்றும் குத்தவக்கரை யை சேர்ந்த இரண்டு பேர் இறந்துள்ளனர். 10-க்கும் மேற் பட்டோர் தடுமாறி விழுந்து படுகாயத்துடன் சிகிச்சை பெற் றுள்ளனர். எனவே அழிஞ்சியாறு கதவணை மதகை சரி செய்து மதகை உயர்த்தி கட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கொள்ளிடம் பிரபு மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.