tamilnadu

img

புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு மூன்றரை லட்சம் மக்கள் கையெழுத்து

நாகப்பட்டினம், ஆக.13- மாணவர்களின் கல்வியையும் வேலை வாய்ப்பினையும் எதிர்காலத் தையும் பாழாக்கும் மத்திய அரசின் புதிய கல்வி வரைவுக் கொள்கைக்கு எதிராகத் தமிழகமெங்கும், கடந்த ஜூலை-15 முதல், செப்டம்பர்-13 வரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பிரச்சார இயக்கம் நடத்தி, மக்களிடம் ஒரு கோடி கையொப்பங் கள் பெறும் மாபெரும் இயக்கம் நடை பெற்றது. நாகை மாவட்டத்தில் 15.07.19 முதல்   31.07.19 வரை மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களின் அனைத்துப் பகுதி களிலும் பிரச்சார இயக்கம் நடத்தி, மக்களிடம் மூன்றரை லட்சம் கையொப் பங்கள் பெறப்பட்டன. அப்படிப் பெறப் பட்ட மக்களின் கையொப்பப் பதிவேடு களை சி.பி.எம். நாகை மாவட்ட 12 ஒன்றி யச் செயலாளர்கள், செவ்வாய்க் கிழமை அன்று,கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில்  செவ்வாய்க் கிழமை அன்று, மாவட்டச் செயலாள ரும் சட்டமன்ற முன்னாள் செயலாளரு மான  நாகைமாலி, மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து ஆகி யோரிடம் ஒப்படைத்தனர்.   அப்போது, செய்தியாளர்களுக்கு நாகை மாலியும் வி.மாரிமுத்துவும் பேட்டியளித்தனர். அவர்கள் கூறி யதாவது: மத்திய மாநில அரசுகளின் பட்டிய லில் இருந்த கல்வியானது, முழுமை யாகத் தற்போது மத்திய அரசின் பட்டி யலுக்குச் செல்கிறது. இதனால், மாநில அரசுகளின் கல்விச் சுதந்திரம், கலாச்சா ரம், மாநில மொழி வளர்ச்சி, தனித்து வம், உரிமைகள் சீரழியும். இது ஒரு சர்வாதிகாரத் தனமாகும். மூன்றாம் வகுப்பிலிருந்து மாண வர்களுக்குத் தேர்வு என்பது, மாண வர்களின் சுய அறிவு வளர்ச்சியினைச் சிதைக்கக் கூடியது. ஒற்றை ஆட்சி முறை, ஒற்றைக் கலாச்சாரம், காவிமய மான-புராணகாலக் கல்வி முறை, குலக்கல்வி முறை, அறிவியலையும் வரலாற்றையும் பின்னோக்கிக் கொண்டு செல்லும் கல்வித் திட்டங்கள், தமிழை வட்டார மொழியாகப் புறக்க ணித்துவிட்டு,  சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்குவது, இந்தி யை எங்கும் புகுத்துவது போன்ற கொடிய திட்டங்கள் புதிய கல்விக் கொள்கை மூலம் கொண்டு வரப்படு கின்றன. 40 ஆயிரம் கல்லூரிகள் 15 ஆயி ரம் கல்லூரிகளாக இவ்வாண்டில் சுருங்கப் போகின்றன. கிராமப் புற மாணவர்கள், ஏழை எளிய மாண வர்கள் இதனால் கல்லூரிகளுக்கே போகமுடியாத நிலை ஏற்படும். எனவே, மக்கள் அனைவரும் புதிய கல்வி முறையை எதிர்த்துப் போராட வேண்டும். செய்தியாளர்கள், ஊடக வியலாளர்கள்  இந்தப் பேராபத்தை உணர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத் திடச் செய்திகளை வெளியிட வேண்டும்”. இவ்வாறு சி.பி.எம். தலை வர்கள் தெரிவித்தார்கள். நிகழ்வில், சி.பி.எம். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஜெய ராமன், எஸ்.துரைராஜ், ஜி.ஸ்டாலின், சி.வி.ஆர். ஜீவானந்தம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் ஏ.வேணு, எம்.முரு கையன், பி.டி.பகு, எம்.சுப்பிரமணி யன், பி.கே.ராஜேந்திரன், கே.செந்தில் குமார், எம்.ஜெயபால், மேகநாதன்,சி.விஜயகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.

;