சீர்காழி, ஆக.19- நாகை மாவட்டம் கொள்ளிடம் அரசு மேல்நிலைப்பள்ளி யில் தலைமையாசிரியர் பழனிவேல் தலைமையில் நடை பெற்ற சுதந்திர தின விழாவில் பெற்றொர் ஆசிரியர் கழகத் தலைவர் தட்சிணாமூர்த்தி, முன்னாள் ஊராட்சித் தலைவர் கமா லூதீன் துணைத் தலைவர் முத்துவேலன் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கொள்ளிடம் அருகே குத்தவக்கரை கிரா மத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தில் கீழ் சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக்கழக வேளாண் புல இறுதியாண்டு மாணவி கள் கலந்து கொண்டு விதைப் பந்தை பயன்படுத்தி தேசியக் கொடியை வரைந்தனர். தொடர்ந்து விதைப் பந்துகளை ஆசி ரியர், மாணவர்களுக்கு வழங்கினர்.