tamilnadu

நாகப்பட்டினம் : ஊராட்சித் தலைவர், ஒன்றியத் தலைவர்கள் தேர்தல் முடிவு

நாகப்பட்டினம், ஜன.11- நாகப்பட்டினத்தின் மாவட்ட ஊரா ட்சித் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் மற்றும் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கான ஒன்றி யத் தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது

மாவட்ட ஊராட்சித் தலைவர்
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சித் தலைவருக்கான தேர்தலில், மாவட்ட ஊராட்சி வார்டுகளில் வெற்றி பெற்ற திமுக, அதிமுகவைச் சேர்ந்த 21  கவுன்சிலர்களுள், 20 பேர் மட்டும் கலந்து  கொண்டனர். இதில், 11-வது வார்டைச்  சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் உமா மகேஸ்வரி, 13 வாக்குகளும், 8-வது வார்டு கவுன்சிலர் வெண்ணிலா 7 வாக்கு களும் பெற்றனர். இதில் நாகை மாவட்ட  ஊராட்சித் தலைவராக திமு.க. வைச் சேர்ந்த உமாமகேஸ்வரி வெற்றி பெற்ற தாக மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் அறிவித்தார்.

ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள்
நாகை மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் வெற்றிபெற்ற ஒன்றி யக் கவுன்சிலர்கள் அந்தந்த ஒன்றிய அலு வலகங்களில் ஒன்றியத் தலைவ ருக்கான மறைமுகத் தேர்தலில் கலந்து  கொண்டனர். இதில், நாகை ஒன்றி யத்தில் வெற்றி பெற்ற 14 கவுன்சிலர்களுள் தி.மு.க.வைச் சேர்ந்த  அனுசுயா 8 வாக்குகள் பெற்று வெற்றி  பெற்றார். கீழ்வேளூர் ஒன்றிய அலுவல கத்தில் ஒன்றியக் கவுன்சிலர்கள் 12  பேர் கலந்து கொண்டனர். கீழ்வேளூர் ஒன்றியத் தலைவராக தி.மு.க.வின் வாசுகி, 7 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கீழையூர் ஒன்றிய அலுவ லகத்தில் வார்டு உறுப்பினர்கள் 12 பேர்  கலந்து கொண்டதில், தி.மு.க. செல்வ ராணி 7 வாக்குகள் பெற்று வெற்றி  பெற்றார். சீர்காழி ஒன்றிய அலுவல கத்தில் வெற்றி பெற்ற 21 கவுன்சி லர்கள் கலந்து கொண்டனர். இதில், 11  வாக்குகள் பெற்று, தி.மு.க. வைச் சேர்ந்த கமலஜோதி வெற்றி பெற்றார். செம்பனார்கோவில் ஒன்றிய அலு வலகத்தில் நடைபெற்ற தேர்தலில் 30 வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில், தி.மு.க.வைச் சேர்ந்த நந்தினி 21 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  தலைஞாயிறு ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தலில் வார்டு உறுப்பி னர்கள் 11 பேர் கலந்து கொண்டதில், தி.மு.க.வைச் சேர்ந்த தமிழரசி 7 வாக்கு கள் பெற்று வெற்றி பெற்றார். கொள்ளிடம் ஒன்றிய அலுவல கத்தில் நடைபெற்ற தேர்தலில், 23 வார்டு  உறுப்பினர்கள் கலந்து கொண்டதில், தி.மு.க.வைச் சேர்ந்த ஜெயப்பிரகாசம் 13 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மயிலாடுதுறை ஒன்றிய அலுவல கத்தில் நடைபெற்ற தேர்தலில் 27 வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் தி.மு.க.வைச் சேர்ந்த காமாட்சிமூர்த்தி, 14 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வேதாரணியம் ஒன்றிய அலுவல கத்தில் நடைபெற்ற தேர்தலில் 25 கவு ன்சிலர்கள் கலந்து கொண்டதில் அதிமு கவைச் சேர்ந்த கமலா என்பவர் தேர்ந்தெ டுக்கப்பட்டு, ஒன்றியத் தலைவராக வெற்றி பெற்றார். திருமருகல் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற 16 கவுன்சிலர்கள் கலந்துகொண்டதில், அதிமுகவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் 10 வாக்கு கள் பெற்று வெற்றி பெற்றார். குத்தாலம்  ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சி லர்கள் 23 பேர் பங்கேற்றனர். இதில் அதி முகவைச் சேர்ந்த மகேந்திரன் 13 வாக்கு கள் பெற்று வெற்றி பெற்றார்.  நாகை மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றி யத் தலைவர்கள் தேர்தலில் திமுகவைச்  சேர்ந்த 8 பேரும், அதிமுகவைச் சேர்ந்த 3  பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.

;